For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டை சேமியா

By Maha
|

அனைவரும் முட்டை நூடுல்ஸ் கேள்விபட்டிருப்போம். ஆனால் முட்டை சேமியாவை கேள்விப்பட்டதுண்டா? ஆம், முட்டை சேமியா என்பது முட்டை நூடுல்ஸ் போன்று தான். ஆனால் இதில் சில மசாலா பொருட்களை அரைத்து பொடி செய்து பயன்படுத்த வேண்டும். மேலும் இது மிகவும் எளிமையான ஒரு காலை உணவு. பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.

குறிப்பாக இந்த ரெசிபியை சூடாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். சரி, இப்போது அந்த முட்டை சேமியாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Egg Vermicelli Recipe For Breakfast

தேவையான பொருட்கள்:

முட்டை - 2 (அடித்தது)
சேமியா - 500 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
ஏலக்காய் - 1
பட்டை - 2 துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸியில் மல்லி, சீரகம், வரமிளகாய், பட்டை, ஏலக்காய் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது கொதித்ததும், அதில் சேமியாவை போட்டு, வேக வைக்க வேண்டும்.

பின் தண்ணீரானது ஓரளவு சுண்டியதும், அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி, தண்ணீர் வற்றியதும் இறக்கினால், சுவையான முட்டை சேமியா ரெடி!!!

English summary

Egg Vermicelli Recipe For Breakfast

If you are wondering how to make the egg vermicelli, we have provided an easy recipe for you to follow. Take a look at this yummy breakfast recipe we have in store for you. One important thing you should keep in mind, is that when you prepare this egg vermicelli, make sure you consume it when hot.
Story first published: Monday, November 25, 2013, 19:53 [IST]
Desktop Bottom Promotion