For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டை பக்கோடா குழம்பு

By Maha
|

நிறைய பேருக்கு முட்டை மிகவும் விருப்பமான உணவுப் பொருளாக இருக்கும். பொதுவாக இந்த முட்டையைக் கொண்டு, ஆம்லெட், போண்டா, குழம்பு என்று தான் செய்வோம். ஆனால் முட்டையைக் கொண்டு வித்தியாசமாக பக்கோடா செய்து, அந்த பக்கோடாவைக் கொண்டு குழம்பு செய்திருக்கிறீர்களா?

ஆம், இங்கு அந்த முட்டை பக்கோடா குழம்பு ரெசிபியைத் தான் உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதனை தவறாமல் முயற்சித்து பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, இப்போது ரெசிபியைப் பார்ப்போமா!!!

Egg Pakora Curry Recipe

தேவையான பொருட்கள்:

பக்கோடாவிற்கு...

முட்டை - 2
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

குழம்பிற்கு...

வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, நன்கு ஸ்பூன் கொண்டு கிளறி விட வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெயில் 1 டேபிள் ஸ்பூன் முட்டைக் கலவையை ஊற்றி பக்கோடா போன்று, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் பக்கோடாக்களாக போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காய பேஸ்ட் போட்டு தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, அரைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பின் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரைட்டி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களைப் போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சுவையான முட்டை பக்கோடா குழம்பு ரெடி!!!

English summary

Egg Pakora Curry Recipe

Egg pakora curry is a unique recipe to try. The eggs are combined with boiled potatoes and gram flour to make soft and delicious pakoras. Then they are dipped into a spicy curry which makes this egg recipe an absolute delight. So, try out this simple and delicious recipe of egg pakora curry and give it a try.
Story first published: Saturday, December 7, 2013, 11:18 [IST]
Desktop Bottom Promotion