வித்தியாசமான சுவையுடைய முட்டை குழம்பு!!!

By:

பொதுவாக முட்டை குழம்பு என்றால், வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு, வேண்டிய மசாலாக்களை தூவி, தண்ணீர் ஊற்றி, முட்டை வேக வைத்து சேர்த்து தான் செய்வோம். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக, புதினாவின் ஃப்ளேவரில் முட்டை குழம்பை செய்யப் போகிறோம். இந்த ரெசிபி உண்மையிலேயே வித்தியாசமான ருசியைக் கொண்டிருக்கும். மேலும் பேச்சுலர்களும் முயற்சிக்கலாம்.

சரி, இப்போது அந்த வித்தியாசமான சுவையுடைய முட்டை குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

முட்டை - 3-4 (வேக வைத்தது)
வெங்காயம் - 2
பூண்டு - 4-5 பல்
பச்சை மிளகாய் - 2-3
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புதினா - 1 கிளை
கொத்தமல்லி - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 சிட்டிகை
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் வெங்காயம், புதினா, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் முட்டையின் தோலை உரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையைப் போட்டு லேசான பொன்னிறத்தில் பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை எடுத்து விட்டு, தாளிப்பதற்கு தேவையான அளவு வைத்துக் கொண்டு, சீரகம் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.

மசாலாவில் உள்ள பச்சை வாசனை போனதும், அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி, தக்காளி சாஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

கிரேவியானது ஓரளவு கெட்டியானதும், அதில் வறுத்து வைத்துள்ள முட்டை இரண்டாக வெட்டி போட்டு, ஒரு முறை கிளறி இறக்கினால், வித்தியாசமான சுவையுடைய முட்டை குழம்பு ரெடி!!!

Read more about: non veg, recipe, egg, curry, bachelor recipe, அசைவம், ரெசிபி, முட்டை, குழம்பு, பேச்சுலர் ரெசிபி
English summary

Egg Curry With Mint Recipe

If you love egg curry and want to experiment with the side dish, add some mint. The mint leaves are grounded with the onions and garlic. The aroma of mint leaves makes it an exotic dish to try for main course. Check out the recipe to prepare egg curry with mint.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter