For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிராகன் சிக்கன் ரெசிபி: சைனீஸ் ஸ்பெஷல்

By Maha
|

சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று தான் டிராகன் சிக்கன் ரெசிபி. இத்தகைய சிக்கன் ரெசிபி அனைத்து சைனீஸ் ரெஸ்டாரண்ட்டுகளிலும் கிடைக்கும். மேலும் இதுவே ஸ்பெஷல் ரெசிபியும் கூட. இத்தகைய டிராகன் சிக்கன் ரெசிபியை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். அதிலும் விடுமுறை நாட்களில் வித்தியாசமான ரெசிபியை முயற்சி செய்து குடும்பத்தினருடன் சாப்பிட்டால், அது இன்னும் இனிமையான அனுபவத்தைக் கொடுக்கும்.

சரி, இப்போது அந்த சைனீஸ் ஸ்பெஷல் ரெசிபியான டிராகன் சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Dragon Chicken Recipe: Chinese Spcl

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ (சற்று நீளமாக வெட்டியது)
இஞ்சி - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
சில்லி ப்ளேக்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 8 அவுண்ஸ்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கையளவு
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வெங்காயத் தாள் - 1 குச்சி
வெஜிடேபிள் ஆயில் - தேவையான அளவு

ஊற வைப்பதற்கு...

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
முட்டை - 1 (வெள்ளைக்கரு மட்டும்)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு பிரட்டி, தனியாக 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.

கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைவில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெசிபி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

English summary

Dragon Chicken Recipe: Chinese Spcl

Have you tried making the Chinese specialty, Dragon chicken at your home? There are a number of people who indulge themselves in a dish of dragon chicken when ever they visit a Chinese restaurant. Here is how you make the dragon chicken, take a look.
Story first published: Saturday, September 28, 2013, 11:58 [IST]
Desktop Bottom Promotion