For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளரிக்காய் சிக்கன் ரெசிபி

By Maha
|

இந்த வார இறுதியில் ஏதேனும் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய ஆசையா? அப்படியெனில் வெள்ளரிக்காய் சிக்கன் ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள். இது சற்று வித்தியாசமான மற்றும் சுவையான ஒரு சிக்கன் ரெசிபி. இதனை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சரி, அந்த வெள்ளரிக்காய் சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Cucumber Chicken Recipe

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
வெள்ளரிக்காய் - 1 (பெரியது மற்றும் லேசாக அரைத்தது)
தயிர் - 1 கப்
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3-4 பற்கள்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 சிட்டிகை
ஏலக்காய் - 2 (பொடி செய்தது)
பட்டை - 2 (பொடி செய்தது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
சிக்கன் மசாலா பொடி - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2-3 (நீளமாக கீறியது)
கடுகு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கன் நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு, அதில் தயிர், அரைத்த வெள்ளரிக்காய், உப்பு, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் மல்லி தூள், 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி, சர்க்கரை, 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக பொரித்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே எண்ணெயில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து வதக்கி, மீதமுள்ள மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து ஊற வைத்துள்ள சிக்கன், சிக்கன் மசாலா பொடி, வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் ஏலக்காய் மற்றும் பட்டை பொடியை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

இப்போது சூப்பரான வெள்ளரிக்காய் சிக்கன் ரெடி!!! இதன் மேல் சிறிது வெள்ளரிக்காயை தூவி அலங்கரித்து, சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

English summary

Cucumber Chicken Recipe

Try out cucumber chicken recipe this weekend and have a hearty and lip-smacking meal.
Story first published: Saturday, June 29, 2013, 19:34 [IST]
Desktop Bottom Promotion