For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன்

By Maha
|

வார இறுதி வந்தாலே அனைவரது வீட்டிலும் சிக்கன், மட்டன் என அசைவ உணவுகளின் மணம் வீசும். அந்த வகையில் இந்த வாரம் ஏதேனும் வித்தியாசமான ரெசிபி முயற்சிக்க நினைத்தால், கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கனை முயற்சித்துப் பாருங்கள். இது மிகவும் சுவையுடனும், காரமாகவும் இருக்கும். மேலும் இது மழைக்காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ரெசிபியும் கூட.

சரி, இப்போது அந்த கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Coorgi Fried Chicken Recipe

தேவையான பொருட்கள்:

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 10
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்ழுன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 5
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 5 பற்கள் (நறுக்கியது)
கூர்க் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம், கடுகு, மிளகு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை போட்டு வாசனை வரும் வரை வறுத்து, பின் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்துவிட்டு, அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் ஒரு டீஸ்பூன் தனியாக வைத்துக் கொண்டு, மீதமுள்ளதை சேர்த்து, அத்துடன் உப்பு சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தனியாக எடுத்த வைத்த பொடியை போட்டு, அத்துடன் வெங்காயம், பூண்டு சேர்த்து 2-3 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து பிரட்ட வேண்டும். பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து தீயை குறைவில் வைத்து 10 நிமிடம் வறுக்க வேண்டும்.

அடுத்து அதில் சிறிது வினிகரை தூவி பிரட்டி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன் ரெடி!!!

English summary

Coorgi Fried Chicken Recipe

Fried chicken recipes are always yummy delights. This special Coorgi fried chicken is an ideal way to begin your weekend.
Story first published: Saturday, August 9, 2014, 19:23 [IST]
Desktop Bottom Promotion