For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைனீஸ் முந்திரி சிக்கன் ரெசிபி

By Neha Mathur
|

இந்த வாரம் வித்தியாசமாக என்ன சமைக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியெனில் சைனீஸ் முந்திரி சிக்கன் ரெசிபி சரியானதாக இருக்கும். இந்த ரெசிபி ஒரு இந்தோ-சைனீஸ் சிக்கன் ரெசிபி.

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சிக்கன் ரெசிபி மிகவும் பிடிக்கும் என்றால், இந்த சைனீஸ் முந்திரி சிக்கன் ரெசிபி சிறந்ததாக இருக்கும். மேலும் இது ஒரு ஸ்பெஷலான ஒரு சிக்கன் ரெசிபியும் கூட. ஏனெனில் இதில் சைனீஸ் சாஸ், வைட்டமின் சி நிறைந்த குடைமிளகாய் மற்றும் முந்திரி போன்றவை இருப்பதால், இந்த ரெசிபி மிகவும் சூப்பராக இருக்கும்.

சரி, இப்போது அந்த சைனீஸ் முந்திரி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெஜிடேபிள் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4-5 பல் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
சிவப்பு குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
முந்திரி - 1 கப்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன்
அரிசி ஒயின் வினிகர் - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 3-4 (நீரில் 5-6 நிமிடம் ஊற வைத்து, பேஸ்ட் செய்தது)
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/4 டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்முறை:

செய்முறை:

1. சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் வெஜிடேபிள் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கழுவிய சிக்கனை அதில் போட்டு, பாதியாக வேகும் வரை வதக்கி, ஒரு தட்டில் தனியாக வைக்க வேண்டும்.

செய்முறை:

செய்முறை:

3. அதே வாணலியில் மீதமுள்ள வெஜிடேபிள் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

4. பின்பு நறுக்கிய வெங்காயம், சிவப்பு குடைமிளகாய் மற்றும் பச்சை குடைமிளகாய் சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

செய்முறை:

செய்முறை:

5. பிறகு பாதியாக வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, சோயா சாஸ், தக்காளி கெட்சப், அரிசி ஒயின் வினிகர், வரமிளகாய் பேஸ்ட், மிளகு தூள் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

6. அதே சமயம், ஒரு சிறிய பௌலில் சிறிது தண்ணீர் ஊற்றி, சோள மாவை சேர்த்து கரைத்து, வாணலியில் ஊற்றி, உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து 15-20 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

செய்முறை:

செய்முறை:

7. சிக்கனானது வெந்ததும், அதனை அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்.

8. இப்போது சுவையான சைனீஸ் முந்திரி சிக்கன் ரெடி!!! இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, June 14, 2013, 19:49 [IST]
Desktop Bottom Promotion