For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்கன் சமோசா

By Staff
|


தேவையான பொருட்கள்:

150 கிராம் கோழிக்கறி, 4 பச்சை மிளகாய், 250 கிராம் வெங்காயம், 6 கிராம்பு, 2 தக்காளி, சிறிது கொத்துமல்லி, கொஞ்சம் அப்பளம், தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய், மைதா கரைசல்

செய்முறை:

எலும்பு இல்லாத கோழிக்கறியை நன்கு கழுவி நறுக்கி வைத்திக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, கிராம்புடன் நறுக்கி பொருட்களையும் கோழிக்கறியையும் சேர்த்து வதக்கவும். கறி வெந்ததும் உப்பு சேர்க்கவும். நல்ல மணம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.

அப்பளத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து எடுத்து வைக்கவும். அதன்மேல் கறி கலவையை வைத்து முக்கோணமாக மடித்து மைதா கரைசலால் ஓரத்தை ஒட்டவும். கறிக்கலவை அனைத்தையும் இதுபோல் செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சமோசா ரெடி.

Read more about: chicken samosa
Story first published: Wednesday, October 3, 2007, 13:19 [IST]
Desktop Bottom Promotion