For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்கன் பெப்பர் ப்ரை

By Maha
|

விடுமுறை நாட்களில், அதிலும் மழைக்காலத்தில் நன்கு காரமாக சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதுவும் அசைவ உணவுகளை நன்கு மூக்குமுட்ட சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவோம். அப்படி சிக்கனை காரமாக சமைத்து சாப்பிட நினைத்தால், சிக்கன் பெப்பர் ப்ரையை முயற்சி செய்து பாருங்கள்.

இது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, ருசியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த சிக்கன் பெப்பர் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Chicken Pepper Fry Recipe

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
மிளகு - 10
மிளகுத் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 2 (1 பொடியாக நறுக்கியது, மற்றொன்று அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வினிகர், வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றம் 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, வரைமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் ஊற வைத்துள்ள சிக்கனை வாணலியில் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து, அதனை மூடி வைத்து, சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கனானது நன்கு வெந்துவிட்டால், அதனை இறக்கினால், சிக்கன் பெப்பர் ப்ரை ரெடி!!!

English summary

Chicken Pepper Fry Recipe

Chicken pepper fry recipe is a very easy chicken recipe that can be made in minutes. Chicken pepper fry is a spicy indian chicken recipe that will tinkle your taste buds with its spices..
Story first published: Saturday, August 2, 2014, 19:52 [IST]
Desktop Bottom Promotion