For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்கன் மிளகு வறுவல்

By Maha
|

Chicken Pepper Fry
சிக்கனில் பல வெரைட்டிகள் உள்ளன. அதிலும் பொதுவாக அசைவ உணவுகள் என்றாலே காரம் தான் முக்கியம். அவ்வாறு நன்கு காரசாரமாக இருக்கும் ஒரு சிக்கன் ரெசிபியெனில் அது சிக்கன் மிளகு வறுவல் தான். சரி இப்போது அந்த சிக்கன் மிளகு வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
மிளகு - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 2 ( 1 அரைத்தது, மற்றொன்று நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
வினிகர் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்க கழுவி, நீரை நன்கு வடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனில், வினிகர், அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, வரமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மீதமுள்ள மிளகுத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு, ஒரு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின்பு அதனை ஒரு தட்டை வைத்து மூடி, சிக்கன் வேகும் வரை மூடி அவ்வப்போது கிளறியும் விட வேண்டும். சிக்கனானது மென்மையானதும், அதனை இறக்கி, கொத்தமல்லி தூவி மூடி வைக்க வேண்டும்.

இப்போது அருமையான சிக்கன் மிளகு வறுவல் ரெடி!!!

English summary

Chicken Pepper Fry | சிக்கன் மிளகு வறுவல்

Chicken pepper fry recipe is famous for its tantalizing taste so try it only if you are a lover of spicy Indian chicken recipes.
Desktop Bottom Promotion