For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்கன் கபிரஜி கட்லெட்

By Maha
|

அசைவ உணவை சாப்பிடுபவர்களுக்கு, சிக்கன் மிகவும் பிடிக்கும். அதிலும் சிக்கனில் வெரைட்டியாக சமைத்து சாப்பிடுவது என்றால் சொல்லவே வேண்டாம். அத்தகைய சிக்கன் வெரைட்டியில் , சிக்கனை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட கட்லெட் நன்றாக இருக்கும். மேலும் சிக்கன் கட்லெட்டை பலவாறு சமைக்கலாம்.

அதில் பெங்காலி ஸ்டைலில் செய்யும் கபிரஜி கட்லெட்இ கொல்கத்தாவில் மிகவும் பிரபலமானது. இதன் ஸ்பெஷல் என்னவென்றால், இந்த சிக்கன் கட்லெட்டை முட்டையில் நனைத்து பொரிப்பது தான். சரி, இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

Chicken Kabiraji Cutlet
தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
முட்டை - 4 (அடித்தது)
பிரட் தூள் - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவற்றை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு கிளறி, எலுமிச்சை சாற்றை ஊற்றி பிரட்ட வேண்டும்.

பின்னர் உப்பு மற்றும் சீரகப் பொடி போட்டு கிளறி, 03-45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும்.

எண்ணெய் காய்வதற்குள், அடித்து வைத்துள்ள முட்டையில் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

எண்ணெயானது காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை, முட்டையில் நனைத்து, பின் பிரட் தூளில் பிரட்டி, தீயை குறைவில் வைத்து, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான சிக்கன் கபிரஜி கட்லெட் ரெடி!!!

English summary

Chicken Kabiraji Cutlet: An Evening Snacks | சிக்கன் கபிரஜி கட்லெட்

The Kabiraji chicken cutlet was popular in the coffee houses and cabins of Kolkata. This kind of chicken cutlet was very popular among the Bengali intellectuals who spend hours discussing politics over cups of tea or coffee.
Desktop Bottom Promotion