For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்கன் ஜல்ப்ரேசி ரெசிபி

By Maha
|

என்ன பேரை கேட்டாலே ஒன்னும் புரியவில்லையா? சிக்கன் ஜல்ப்ரேசி ஒரு பாகிஸ்தான் ரெசிபி. இந்த ரெசிபி சாதத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும். எனவே எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிகளை விடுமுறை நாட்களிலோ அல்லது பண்டிகையின் போதோ செய்து சாப்பிடலாம்.

அதிலும் ரம்ஜான் பண்டிகை வரப் போகிறது. இந்த பண்டிகையின் போது கூட, இந்த சிக்கன் ஜல்ப்ரேசியை செய்தால், சற்று ஸ்பெஷலான உணவாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியின் செய்முறை மிகவும் எளிமையானது. இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Chicken Jalfrezi Recipe

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5-7 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பிறகு பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் கிளறி, தக்காளி மற்றும் உப்பு போட்டு, தக்காளி நன்கு வேகு வரை வதக்க வேண்டும்.

அடுத்து கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் ஜல்ப்ரேசி ரெடி!!! இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து சிறிது நேரம் மூடி வைத்து, பின் சாதத்துடன் பரிமாறினால் நன்றாக இருக்கும்.

English summary

Chicken Jalfrezi Recipe

Chicken Jalfrezi is one such exotic chicken curry recipe. This recipe is Pakistani in origin, coming from its homeland of Karachi. You can easily try Chicken Jalfrezi as a Ramzan recipe because it allows you to prepare a delicious spicy chicken curry within no time.
Story first published: Saturday, July 20, 2013, 17:11 [IST]
Desktop Bottom Promotion