For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளா ஸ்டைல் சிக்கன் கட்லெட்

By Maha
|

சிக்கன் பிரியர்களே! உங்களுக்காக ஒரு ருசியான கேரளா ஸ்டைல் சிக்கன் கட்லெட் ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இந்த ரெசிபியானது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

சரி, இப்போது அந்த கேரளா ஸ்டைல் சிக்கன் கட்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Chicken Cutlet Kerala Style Recipe

தேவையான பொருட்கள்:

சிக்கன் கீமா - 1/2 கிலோ
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 (மசித்தது)
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)
முட்டை - 1 (நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்)
பிரட் தூள் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப்

செய்முறை:

முதலில் சிக்கன் கீமாவை நன்கு சுத்தமாக கழுவி நீரில் வடித்துவிட்டு, ஒரு பௌலில் போட்டு, அத்துடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, கையால் மீண்டும் ஒருமுறை மசிக்க வேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி, பச்சை மிளகாய், கரம் மசாலா, மிளகுத் தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு, மசாலாப் பொருட்கள் ஒன்று சேர பிசைய வேண்டும்.

பின்பு அதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கட்லெட் போன்று தட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டை முட்டையில் நனைத்து, பின் பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கேரளா ஸ்டைல் சிக்கன் கட்லெட் ரெடி!!!

English summary

Chicken Cutlet Kerala Style Recipe

The chicken cutlet recipe popular in Kerala is a very special one. To make chicken cutlet in the Kerala style, read on..
Story first published: Saturday, August 2, 2014, 13:23 [IST]
Desktop Bottom Promotion