For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்கன் ஆப்கானி

By Maha
|

விடுமுறை நாட்களில் வீட்டில் அனைவரும் இருக்கும் போது வித்தியாசமான சுவையில் ஏதேனும் அசைவ சமையல் சமைக்க ஆசைப்பட்டால், ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் ஒரு அருமையான சிக்கன் குழம்பை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாம். மேலும் இந்த சிக்கன் குழம்பிற்கு, சிக்கன் ஆப்கானி என்று பெயர். இது சாதத்திற்கு அருமையாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் ஆப்கானியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Chicken Afghani: A Spicy Treat

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 4
பட்டை - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

ஊற வைப்பதற்கு...

தயிர் - 1 கப்
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
எள் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் முந்திரி, எள், பூண்டு சேர்த்து நன்கு நைஸாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து கழுவிய சிக்கனில் அரைத்த முந்திரி பேஸ்ட், வெங்காய பேஸ்ட், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

3 மணிநேரம் ஆனப் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட வேண்டும்.

பின் உப்பு, கரம் மசாலா, மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.

அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து 20-25 நிமிடம் தீயை குறைவில் வைத்து, சிக்கனை வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது வெந்ததும், அடுப்பை அணைத்து, கொத்தமல்லி மற்றும் குங்குமப்பூவை தூவி அலங்கரித்தால், சுவையான சிக்கன் ஆப்கானி ரெடி!!!

English summary

Chicken Afghani: A Spicy Treat

Chicken Afghani Recipe originally hails from Afghanistan. It is one of the tastiest chicken recipe. So, try out this delicious recipe of chicken afghani to give your taste buds a tangy and spicy treat.
Story first published: Sunday, June 9, 2013, 9:53 [IST]
Desktop Bottom Promotion