For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செட்டிநாடு மிளகு கோழி வறுவல்: ரமலான் ஸ்பெஷல் ரெசிபி

By Maha
|

செட்டிநாடு ரெசிபிக்கள் ஹோட்டல்களில் தான் சுவைத்திருப்போம். ஆனால் அந்த செட்டிநாடு ரெசிபிக்களை வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம். அதிலும் செட்டிநாடு மிளகு கோழி வறுவல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ரமலான் நோன்பு இருப்பவர்கள், இதனை மாலை அல்லது காலையில் செய்து சாப்பிடலாம். அந்த அளவில் செய்வதற்கு எளிமையாக இருக்கும்.

மண மணக்கும் செட்டிநாடு ரெசிபிக்கள்!!!

சரி, இப்போது அந்த செட்டிநாடு மிளகு கோழி வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா...!

Chettinad Milagu Kozhi Varuval: Ramadan Special Recipe

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

பட்டை - 3
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரியாணி இலை -1
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு பிரட்டி 30 நிமிடம் உற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்டத்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் மல்லித் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 2 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, மிதமான தீயில் 8-10 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்ததும், அதில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவினால், செட்டிநாடு மிளகு கோழி வறுவல் ரெடி!!!

Image Source

English summary

Chettinad Milagu Kozhi Varuval: Ramadan Special Recipe

Do you know how to prepare Chettinad Milagu Kozhi Varuval? It is very easy to prepare during ramadan. Take a look....
Desktop Bottom Promotion