For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூரை மீன் கட்லெட்

By Herman
|

அனைவருக்குமே கட்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் உருளைக்கிழங்கு கட்லெட் தான் அனைவரது மத்தியிலும் மிகவும் பிரபலமானது. ஆனால் மீனை வைத்து கட்லெட் செய்வது மிகவும் அரிதானது. ஏனெனில் அதில் முள் இருப்பதால், பெரும்பாலானோர் மீன் கொண்டு கட்லெட் செய்யமாட்டார்கள்.

இப்போது மீன்களில் ஒன்றான டூனா எனப்படும் சூரை மீனைக் கொண்டு, எளிதான முறையில் எப்படி கட்லெட் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் செய்து மகிழுங்கள்.

Canned Tuna Fish Cutlets

தேவையான பொருட்கள்:

சூரை மீன் - 2 சிறிய டின்
வெங்காயம் - 2 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
முட்டை - 1-2 (நன்கு அடித்தது)
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து, மசித்தது)
பிரட் தூள் - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

கரம் மசாலாவிற்கு...

கிராம்பு - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 3 சிறிய துண்டுகள்

செய்முறை:

முதலில் கரம் மசாலாவிற்கு கொடுத்த பொருட்களை லேசாக 2 நிமிடம் வறுத்து, குளிர வைத்த, பின் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சூரை மீனை நன்கு சுத்தமாக கழுவி, துண்டாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, 3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு துண்டுகளாக்கப்பட்ட மீனை சேர்த்து, மீன் வேகும் வரை அடுப்பில் வைத்து கிளறி இறக்க வேண்டும். (குறிப்பாக தண்ணீர் சேர்க்கக்கூடாது.)

பின்னர் அந்த மீன் கலவையை குளிர வைத்து, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அத்துடன் சேர்த்து, கையால் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதனை கட்லெட் போன்று தட்டையாகவோ அல்லது வட்டமாகவோ தட்டி, அதனை அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள மீன் கலவையை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான சூரை மீன் கட்லெட் ரெடி!!! இதனை தக்காளி/புதினா சட்னியுடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.

English summary

Canned Tuna Fish Cutlets | சூரை மீன் கட்லெட்

Canned Tuna Fish Cutlets makes a perfect appetizer for your evening. So, try them out and give your family and friends a delightful treat with these tuna fish cutlets.
Story first published: Sunday, May 5, 2013, 14:49 [IST]
Desktop Bottom Promotion