வாழைப்பழ முட்டை தோசை

காலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ஏதேனும் காலை உணவு செய்ய நினைத்தால், வாழைப்பழ முட்டை தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மேலும் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், இதனை உட்கொள்வதும் நல்லது.

சரி, இப்போது வாழைப்பழ முட்டை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Banana Egg Dosa Recipe

தேவையான பொருட்கள்:

நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
முட்டை - 2
சர்க்கரை/உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து, அத்துடன் சர்க்கரை/உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள கலவையை தோசைகளாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வாழைப்பழ முட்டை தோசை ரெடி!!!

Read In English

Want to know how to prepare banana egg dosa at home easily? Check out and give it a try...
Please Wait while comments are loading...