For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவதி ஸ்டைல் மட்டன் கபாப்

By Maha
|

பொதுவாக சிக்கன் கபாப் தான் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும். ஆனால் ஒருமுறை மட்டன் கபாப்பை சுவைத்துப் பார்த்தால், பின் அதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள். அதிலும் அவதி ஸ்டைல் மட்டன் கபாப் சுவைத்துப் பார்த்தால், அதனை விட சிறந்தது எதுவும் இல்லை என்று சொல்வீர்கள்.

இங்கு அந்த அவதி ஸ்டைல் மட்டன் கபாப் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சாப்பிட்டு பாருங்கள்.

Awadhi Style Mutton Kebab

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ (எலும்பில்லாதது, சிறு துண்டுகளாக்கப்பட்டது)
பப்பாளிக் காய் பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1/4 கப்
வட்டமாக நறுக்கிய வெங்காயம் - சிறிது (அலங்கரிக்க)

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பப்பாளிக் காய் பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், மிளகாய் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் நீர் இருந்தால், அடுப்பில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை கிளறி இறக்கி, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மட்டனை போட்டு, அதன் மேல் வெண்ணெயை தடவி, 15-20 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால், அவதி ஸ்டைல் மட்டன் கபாப் ரெடி!!!

English summary

Awadhi Style Mutton Kebab

Here is the recipe for the famous awadhi style mutton kebab. This recipe is easy and does not require too much of hard work. But once it is prepared you definitely can't stop just at one.
Story first published: Wednesday, June 11, 2014, 13:13 [IST]
Desktop Bottom Promotion