For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவதி சிக்கன் ரெசிபி

By Maha
|

இதுவரை நீங்கள் எத்தனையோ சிக்கன் ரெசிபிக்களை முயற்சித்திருப்பீர்கள். ஆனால் அவதி ஸ்டைல் சிக்கன் ரெசிபியை சமைத்துள்ளீர்களா? அவதியில் இந்த சிக்கன் ரெசிபியானது மிகவும் பிரபலமானது. மேலும் இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.

இங்கு அந்த அவதி ஸ்டைல் சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

Awadhi Chicken Recipe

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
தயிர் - 3/4 கப்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு - 4
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
அரைத்த தக்காளி - 1/4 கப்
முந்திரி - 5-6
வதக்கிய வெங்காய பேஸ்ட் - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
எண்ணெய்/நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர், மல்லித் தூள், சீரகப் பொடி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு மிக்ஸியில் முந்திரி சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை அதிகரித்து 3-4 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

அடுத்து மிளகாய் தூள், அரைத்த தக்காளி சேர்த்து கிளறி, பின் வதக்கிய வெங்காய பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட், ஏலக்காய் பொடி, ஜாதிக்காய் பொடி, கரம் மசாலா சேர்த்து 5-6 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

இறுதியில் அதில் உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து பிரட்டி, மூடி வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், அவதி சிக்கன் ரெடி!!!

English summary

Awadhi Chicken Recipe

Awadhi chicken is a delicious chicken recipe from the culinary treasures of the Awadhi cuisine. It has a rich and creamy texture and uses very mild spices.
Story first published: Wednesday, January 7, 2015, 13:15 [IST]
Desktop Bottom Promotion