Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

முட்டையை வைத்து செய்யக்கூடிய 8 ஸ்நாக்ஸ் ரெசிபிக்கள்!!!

Posted by:
Published: Sunday, February 17, 2013, 6:05 [IST]

முட்டையில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைய சத்துக்கள் உள்ளன. குறிப்பாக முட்டையில் தான் மற்ற உணவுப் பொருட்களை விட அதிக அளவில் புரோட்டீன் மற்றும் சல்பர் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இதில் உடலுக்கு தேவையான 9 அமினோ அமிலங்கள், கோலைன், வைட்டமின் டி போன்றவைகளும் உள்ளன. மேலும் முட்டையை அதிகம் சாப்பிட்டால், கண்களுக்கு நல்லது.

எனவே அத்தகைய உணவுப் பொருளை காலையில் காலை உணவாகவோ அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாகவோ செய்து சாப்பிடலாம். அதிலும் முட்டையை குழம்பு, குருமா, மசாலா என்று மதிய வேளையில் சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடும் வகையில் தான் செய்வோம். ஆனால் அதனை வைத்தும் சூப்பரான ஸ்நாக்ஸ்களை செய்யலாம். இத்தகைய ஸ்நாக்ஸ்கள் குறிப்பாக டயட்டில் இருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறந்ததாக இருக்கும். இப்போது அத்தகைய முட்டையை எப்படியெல்லாம் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம் என்று ஒருசிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, சமைத்து சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மசாலா முட்டை புர்ஜி

டயட்டில் இருப்பவர்கள் முட்டையை காலை வேளையில் சாப்பிடுவார்கள். அப்போது முட்டையை ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டால், நன்றாக இருக்கும். குறிப்பாக மசாலா முட்டை புர்ஜி ஏற்றதாக இருக்கும். இதனை செய்வது என்பது மிகவும் எளிமையானது.

செய்முறை

காளான் ஆம்லெட்

முட்டையில் செய்யப்படும் ஆம்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. அந்த வகைகளில் காளானை வைத்தும் ஆம்லெட் செய்யலாம். இந்த ரெசிபியானது செய்துவது மிகவும் எளிது. மேலும் இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த காலை உணவாக கூட இருக்கும்.

செய்முறை

 

 

முட்டை நூடுல்ஸ்

இன்றைய குழந்தைகளுக்கு எது பிடிக்கிறதோ இல்லையோ, மேகி, நூடுல்ஸ் போன்றவை மிகவும் பிடிக்கும். எனவே அந்த மேகி அல்லது நூடுல்ஸ் உடன், புரோட்டீன் அதிகம் உள்ள முட்டையை சேர்த்து, முட்டை நூடுல்ஸ் செய்து கொடுத்தால், நிச்சயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

செய்முறை

 

பிரட்-முட்டை டோஸ்ட

குழந்தைகளுக்கு, பிரட்-முட்டை டோஸ்ட் ஒரு வித்தியாசமான காலை உணவாக அல்லது மாலை ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம். மேலும் பள்ளிக்கு போகும் குழந்தைகளுக்கு, இந்த ரெசிபி ஒரு நாகரீகமான முறையில் அமையும். புரத சத்து அதிகம் நிறைந்த இந்த உணவானது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், சுவையாகவும் இருக்கும். இதன் செய்முறையும் ஈஸியானது.

செய்முறை

 

 

முட்டை ஆலு சாட்

மாலை வேளையில் குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும் வகையில் ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து ஒரு சாட் ஐட்டம் செய்து கொடுக்கலாம். இந்த சாட் ஐட்டம் சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும்.

செய்முறை

 

முட்டை தோசை

பொதுவாக தோசை அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும். எனவே அத்தகைய தோசையில் முட்டையை சேர்த்து, முட்டை தோசை செய்து கொடுத்தால், குழந்தைகள் சாப்பிட அருமையாக இருப்பதோடு, ஒரு நல்ல ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.

செய்முறை

 

முட்டை பொரியல்

முட்டை என்றாலே அனைவருக்கும் முட்டை பொரியல் தான் ஞாபகம் வரும். அத்தகைய முட்டைப் பொரியலில், எளிமையாகவும், சுவையுடனும் ஒரு முட்டைப் பொரியல் செய்ய ஆசையா? அப்படியெனில் கீழே உள்ள அதன் செய்முறையை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை

 

முட்டை ஸ்பாஞ்ச்

இதுவரை முட்டையை அப்படியே வேக வைத்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த முட்டையில் சில பொருட்களை சேர்த்து, பின்னர் வேக வைத்து சாப்பிட்டிருப்போமா? இல்லை அல்லவா! அவ்வாறு முட்டையை வேக வைப்பதற்கு முன், அதில் மசாலாப் பொருட்களை சேர்த்து வேக வைத்தால் தான், அதற்கு பெயர் முட்டை ஸ்பாஞ்ச். இதுவும் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான். இந்த வித்தியாசமான செய்முறையை அறிய, கீழே உள்ள செய்முறையை கிளிக் செய்யுங்கள்.

செய்முறை

 

English summary
Egg is one of the healthiest food. It has high-quality protein and all 9 essential amino acids. So here are some of the egg snacks recipes are listed below.
Subscribe Newsletter