For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபுரூட் பேஸ்ட்

By Super
|

சில நேரங்களில் குழந்தைகளை பழம் சாப்பிட வைப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆகவே அவர்களுக்கு பழங்களை பேஸ்ட் செய்து கொடுத்தால், சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் இதனை அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லது ரொட்டி மீது தடவியோ அல்லது பாலுடன் சேர்த்தும் உபயோகிக்கலாம். அதிலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் அளவானது ஒரு பெரிய பாட்டில் முழுவதும் வரும். ஆகவே அதனை சேகரித்து வைத்து, வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

How to Make Toddler Fruit Paste

தேவையான பொருட்கள்:

வாழைபழம் - 3
ஆப்பிள்/பேரிக்காய் - 2
ஆரஞ்ச் ஜுஸ் - 100 மி.லி
ஸ்ட்ராபெர்ரி - 3 கையளவு
சர்க்கரை - 5 டீஸ்பூன் (குறிப்பாக எளிதில் திருப்திப்படுத்த முடியாத குழந்தைகளுக்காக)

செய்முறை:

ஆப்பிளின் தோலுரித்த பிறகு, அதன் மையப்பகுதியை நீக்கிக் கொள்ளவும்.

வாழைப்பழங்களின் தோலை உரித்து, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

பின் எல்லாவற்றையும் ப்ளெண்டரில் போட்டு, நன்றாக பேஸ்டாக வரும் வரை கலக்கவும்.

பின்பு ஸ்ட்ராபெர்ரியில் உள்ள பச்சை நிற காம்பு பகுதியை நீக்கி ப்ளெண்டரில் போட்டு, சர்க்கரை சேர்த்து, 5-8 விநாடிகள் மெதுவாக கலவையை கலக்கவும்.

பின்பு ஆரஞ்சு சாற்றை சேர்த்து 2 விநாடி கலக்கவும்.

இப்போது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் பழ பேஸ்ட்டானது தயாராகியிருக்கும்.

பிறகு ஒரு கண்ணாடி ஜாடியில் அதனை ஊற்றி, குளிர்சாதன பெட்டியில் வைத்து, இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தலாம்.

குறிப்புகள்:

சிறிது பெரிய குழந்தைகளுக்கு, இக்கலவையுடன் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்து கொடுப்பது மிகவும் ஆரோக்கியமானது.

எச்சரிக்கைகள்:

* 1 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு தேன் சேர்க்கக் கூடாது. அது அவர்களுக்கு கெடுதலை செய்யும்.

* அதிக சர்க்கரை சேர்க்க கூடாது, அது புதிதாக வளரும் பற்களுக்கு கெடுதலை செய்யும்.

English summary

How to Make Toddler Fruit Paste | ஃபுரூட் பேஸ்ட்

Sometimes it is hard to get toddlers (1 and a half years+) to eat fruit. Here is a recipe for a delicious fruit paste that can be eaten by itself, spread on crackers or bread, or add to a drink.
Story first published: Tuesday, April 9, 2013, 16:40 [IST]
Desktop Bottom Promotion