For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரட்-முட்டை டோஸ்ட்

By Maha
|

Bread Egg Toast
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் முதன்மையானவை முட்டை. அதிலும் சில குழந்தைகள் முட்டையை கண்டாலே வெறுத்து ஓடுவர். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு, பிரட்-முட்டை டோஸ்ட் ஒரு வித்தியாசமான காலை உணவாக அல்லது மாலை ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம். மேலும் பள்ளிக்கு போகும் குழந்தைகளுக்கு, இந்த ரெசிபி ஒரு நாகரீகமான முறையில் அமையும். புரத சத்து அதிகம் நிறைந்த இந்த உணவானது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், சுவையாகவும் இருக்கும். இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

முட்டை - 1
பிரட் - 2
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி - 1 (நறுக்கியது)

செய்முறை:

முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணையை ஊற்றவும்.

பிரட் துண்டுகளின் நடுவில் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டை போடுவதற்கு ஒரு சிறிய டம்ளர் கொண்டு, பிரட்டின் மேல் அழுத்தினால், பிரட்டானது வட்டமாக வெட்டப்பட்டிருக்கும்.

பின் இரண்டு பிரட் துண்டுகளையும் தவாவில் வைத்து நன்கு ரோஸ்ட் செய்து, ஒரு பிரட் துண்டை எடுத்துவிட வேண்டும். பின் பிரட் துண்டில் போடப்பட்ட ஓட்டையில் வெண்ணையை ஊற்ற வேண்டும்.

பிறகு அந்த ஓட்டையில் முட்டையை ஊற்றி, பிரட் துண்டின் இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை திருப்பி போட்டு ரோஸ்ட் செய்ய வேண்டும். (பிரட் மற்றும் முட்டையின் இருபக்கங்களையும் இரண்டு நிமிடங்கள் என தவாவில் பிரட்ட வேண்டும்.)

இப்போது சூப்பரான பிரட்-முட்டை டோஸ்ட் ரெடி!!!

இதனை ஒரு தட்டில் அல்லது ஒரு சிறிய பௌலில் வைத்து பரிமாறவும். அதிலும் அதன் மேற்புறத்தில் சாஸ், சீஸ், பழம் அல்லது ஏதாவது கிரேவியுடன் பரிமாற வேண்டும். பொறுமையாக சமைத்தால் சுவை நிச்சயம் கிடைக்கும்.

English summary

How to Make Eggs in a Basket | பிரட்-முட்டை டோஸ்ட்

Eggs in a basket is a nifty way to fry your egg by containing it inside a piece of bread. This is a tasty and fun way to get your breakfast protein fix, and even picky eaters will enjoy this one!
Story first published: Tuesday, January 8, 2013, 17:09 [IST]
Desktop Bottom Promotion