புத்திசாலியான மற்றும் வெள்ளையான குழந்தை பிறக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

கர்ப்பிணிகளே! இங்கு புத்திசாலியான மற்றும் வெள்ளையான குழந்தை பிறக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Subscribe to Boldsky

கர்ப்பிணிகள் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளும் குழந்தைகளைச் சென்றடையும். பல ஆய்வுகளில், குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்டு வந்தால், பிறக்கும் குழந்தை புத்திசாலியாகவும், வெள்ளையாகவும் பிறக்கும் என தெரிய வந்துள்ளது.

What To Eat During Pregnancy For Fair And Intelligent Baby

எனவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும் சரிவிகித உணவுகளை உட்கொண்டு வர வேண்டியது அவசியம். வயிற்றில் குழந்தை வளர வளர, கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

இங்கு பிறக்கும் குழந்தை வெள்ளையாகவும், புத்திசாலியாகவும் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஃபோலிக் அமில உணவுகள்

குழந்தையின் மூளைச் செல்களின் உருவாக்கத்திற்கு போலிக் அமிலம் மிகவும் முக்கியமானது. ஆகவே கர்ப்ப காலத்தில் தவறாமல் ஃபோலிக் அமில உணவுகளான பருப்பு வகைகள், கீரைகள் மற்றும் பச்சை இலை காய்கறிகளை உட்கொண்டு வாருங்கள். அதோடு மருத்துவர் பரிந்துரைக்கும் ஃபோலிக் அமில மாத்திரைகளையும் தவறாமல் எடுத்து வாருங்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

ப்ளூபெர்ரி, தக்காளி, பச்சை காய்கறிகள் போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இவை ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

இரும்புச்சத்து

கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் போதுமான இரும்புச்சத்து கிடைத்தால் தான், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு வேண்டிய போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கும். ஆகவே இரும்புச்சத்து நிறைந்த பருப்பு வகைகள், சிக்கன், செரில் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.

புரோட்டீன்

கருவின் வளர்ச்சியில் புரோட்டீன் முக்கிய பங்கை வகிக்கிறது. தினமும் கர்ப்பிணிகள் 10 கிராம் புரோட்டீனை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே தயிர், பீன்ஸ், வேர்க்கடலை வெண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்து வாருங்கள்.

குழந்தை வெள்ளையாக பிறப்பதற்கு...

தேங்காய், குங்குமப்பூ பால், முட்டை, பால், பாதாம், நெய், ஆரஞ்சு, சோம்பு போன்றவற்றை கர்ப்பிணிகள் உட்கொண்டால், குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து உணவுப் பொருட்களை உட்கொள்வதோடு, அமைதியான மனநிலையுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

குறிப்பு

மீன்களில் பாதரசம் இருப்பதால், கர்ப்பிணிகள் கண்ட மீன் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக கானாங்கெளுத்தி, சுறா போன்றவற்றை கர்ப்பிணிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What To Eat During Pregnancy For Fair And Intelligent Baby

Are you wondering what to eat during pregnancy for fair and intelligent baby. Read on...
Story first published: Friday, January 6, 2017, 17:19 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter