For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிற்றில் வளரும் குழந்தை புத்திசாலியாக பிறக்க வேண்டுமா?

|

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது நட்ஸ் சாப்பிடுவது நல்லதல்ல என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்தது. ஆனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் நட்ஸ் சாப்பிட்டால், தாய்க்கும், சேய்க்கும் மிகவும் நல்லது. குறிப்பாக நட்ஸை அளவாக உட்கொண்டால் தான் நன்மையைப் பெற முடியும்.

அதுவும் ஒரு நாளைக்கு 20-25 கிராம் நட்ஸ் சாப்பிட்டால் போதுமானது என ஊட்டச்சத்து நிபுணரான ஸ்வாதி கூறுகிறார். கர்ப்பிணிகள் இப்படி நட்ஸ் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் வளரும் குழந்தை புத்திசாலியாகப் பிறக்கும். சரி, இப்போது எந்த நட்ஸ்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது என காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதாம்

பாதாம்

ஒரு கையளவு பாதாமை நீரில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுவது குறையும், முன்சூல்வலிப்பு அபாயம் குறையும் மற்றும் கர்ப்ப கால மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

வேர்க்கடலை

வேர்க்கடலை

வேர்க்கடலையை கர்ப்ப காலத்தில் உட்கொள்வது நல்லது. ஆனால் அந்த வேர்க்கடலையை அளவாகத் தான் உட்கொள்ள வேண்டும். முக்கியமாக உப்பு நிறைந்த வேர்க்கடலையை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

மெகடாமியா நட்ஸ்

மெகடாமியா நட்ஸ்

இந்த நட்ஸில் மோனாஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களான நல்ல கொழுப்புக்கள், புரோட்டீன்கள், ஃபோலேட் போன்ற கர்ப்ப காலத்தில் தேவைப்படுபவை அதிகம் உள்ளது. இருப்பினும் அளவாக உட்கொள்ள வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

பிஸ்தா

பிஸ்தா

பிஸ்தாவில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. மேலும் இதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், நீரிழிவு உள்ள கர்ப்பிணிகளுக்கு இது ஏற்றது.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

மற்ற நட்ஸ்களை விட வால்நட்ஸில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. சொல்லப்போனால் கர்ப்பிணிகள் மற்ற நட்ஸ்களை விட, இதனை உட்கொண்டால், வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருப்பதோடு, மூளையின் செயல்பாடும் அற்புதமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types Of Nuts You Must Eat During Pregnancy

It was believed that pregnant women must avoid eating nuts. But eating nuts are completely healthy during pregnancy, although, you need to eat them in limited portions only.
Story first published: Wednesday, June 22, 2016, 17:16 [IST]
Desktop Bottom Promotion