கர்ப்பகாலத்தில் மறக்காமல் செய்ய வேண்டிய 9 விஷயங்கள்!

Subscribe to Boldsky

கர்ப்பக் காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் தெரியாமல் செய்யும் ஒருசில விஷயங்கள் கூட சிசுவின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பாதித்துவிடலாம். நெடுந்தூர வாகன பயணத்தில் இருந்து ஒருசில உணவுகள் வரை பெண்கள் கர்ப்பக் காலத்தில் தவிர்க்க வேண்டும்.

அதே போல கர்ப்பக் காலத்தில் ஒரு சில விஷயங்களை பெண்கள் தவறாமல் செய்யவும் வேண்டும். அவை என்னென்ன? அவற்றால் சிசு வளர்ச்சி மற்றும் ஆரோக்யத்தில் எற்படும் மாற்றங்கள் என்ன என்று இனிக் காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உடலுறவு

கர்ப்பகாலத்தில் உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது. இது கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்கும். மேலும், இது கர்ப்காலத்தில் ஹார்மோன்கள் மேலோங்கவும் உதவுகிறது. 6 -7 மாதத்திற்கு பிறகு இதை தவிர்த்துவிடுங்கள்.

உடற்பயிற்சி

கர்ப்பம் அடைந்தவுடன் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்துவிட வேண்டாம். இது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் குழந்தைக்கும் நன்மை விளைவிக்க கூடியது. எனவே, தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.

பயணம்

கர்ப்பமாக இருக்கும் போது நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். அப்படி மேற்கொண்டாலும் சிறு சிறு இடைவேளை எடுத்துக் கொண்டு மேற்கொள்ளுங்கள். பயணத்தினால் உடலில் ஏற்படும் உஷ்ணம் சிசுவின் வளர்ச்சியை பாதிக்கும்.

இறைச்சி

இறைச்சியில் அதிகளவு இரும்புச்சத்து இருக்கிறது. ஆனால், பதபடுத்தப்பட்ட அல்லது ஃபிரிட்ஜில் அதிக நாள் குளிரூட்டப்பட்ட இறைச்சியை உட்கொள்ள வேண்டாம். இதில் உண்டாகுன் பாக்டீரியாக்கள் சிசுவிற்கு அபாயமாக கூட அமையலாம்.

உறக்கம்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நன்கு உறங்க வேண்டியது அவசியம். ஆனால், நாள் முழுக்க உறங்குவது கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். குட்டித் தூக்கம் போடுவது தான் கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது என அறிவுரைக்கின்றனர்.

நீண்ட நேர குளியல்

அதிக சூடு இல்லாத வெதுவெதுப்பான நீரில் (பாத் டப்பில்) நீண்ட நேரம் நீராடுவது கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் உடல் சோர்வை குறைக்க உதவும்.

பால் பொருட்கள்

பால் உணவுகள் கர்ப்பிணிப் பெண்களின் உடல்நலத்திற்கு மிகவும் சிறந்தது. ஆனால், பாக்டீரியா தாக்கம் ஏற்படாத பால் பொருட்களை உட்கொள்ளுங்கள். பால் உணவுகளின் மூலம் உண்டாகும் லிஸ்டீரியோசிஸ் எனும் பாக்டீரியா சிசு வளர்ச்சியை பாதிக்க கூடியது.

மசாஜ்

மாதத்திற்கு ஒரு முறையாவது கர்ப்பிணி பெண்கள் மசாஜ் செய்துக் கொள்வது நல்லது. இது இறுக்கமின்றி இருக்கவும், இலகுவாக உணரவும் பயனளிக்கும்.

காபி

காபியில் இருக்கும் காஃபைன் சிசுவிற்கு உகந்தது அல்ல என்பார்கள். ஆம், கர்ப்பகாலத்தில் அளவிற்கு அதிகமாக காபி குடிக்க வேண்டாம். ஆனால், காலையில் ஒருவேளை குடிப்பதில் எந்த தவறும் இல்லை. பெரிதாய் எந்த தாக்கமும் ஏற்படாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Not To Give Up During Pregnancy

Things Not To Give Up During Pregnancy, read here in tamil.
Story first published: Tuesday, March 8, 2016, 12:02 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter