For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகளுக்கு சமீபத்தில் அதிகரிக்கும் பிரச்சனை!!

|

உலகளவில் ஐந்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு இரும்புச்சத்து குறைபாடு உள்ளது. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாக மருத்துவ ஆய்வு கூறுகிறது.

இரும்புச்சத்து குறைபாடும், தைராய்டு பாதிப்பும் கர்ப்பிணிகளுக்கு காணப்படும் பாதிப்புகள். இவை கருவின் வளர்ச்சியை பாதிக்கும். இரும்புச்சத்து குறைபாட்டினால், தைராய்டு நோயும் ஏற்படுகிறது. மேலும் தீவிர இரும்புச்சத்து குறைபாட்டினால் கருக்கலைப்பு உண்டாகிறது.

Iron deficiency is a major issue among pregnant women

தைராய்டு சுரப்பிற்கு:

தைராய்டு பெராக்ஸிடேஸ் என்ற புரதம் தைராய்டு சுரப்பதற்கு தேவை. தாய்க்கு போதிய அளவு தைராய்டு சுரந்தால்தான், கருவின் மூளை வளர்ச்சி முழுமையடையும். அந்த தைராய்டு பெராக்ஸிடேஸ் புரதம் இயங்க இரும்புச்சத்து தேவை.

எப்போது இரும்புச் சத்து குறைகிறதோ, புரதத்தின் உற்பத்தியும் பாதிக்கிறது. அதுவும் முதல் மூன்று மாதத்திற்குள் மூளை வளர்ச்சி உருவாகிவிடுவதால், அந்த சமயங்களில் இரும்பு சத்து அவசியம் தேவைப்படுகிறது.

அதே போல், இரும்பு சத்து குறைவதினால், தன்னிச்சையாக நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்பட்டு, அவை தைராய்டு செல்களை அழிக்க நேரிடும். இது கர்ப்பிணிகளுக்கு ஆபத்து.

இந்த ஆய்விற்காக சுமார் 1900 கர்ப்பிணிப் பெண்களை ஆய்வில் கண்காணித்து வந்தனர். அவர்களின் ரத்தத்தில் உள்ள இரும்பின் அளவு, தைராய்டு பெராக்ஸிடேஸ் அளவு, தைராய்டு சுரப்பின் அளவு ஆகியவற்றை கண்காணித்து ஆய்வினை சமர்ப்பித்தனர்.

இந்த ஆய்வில் 35% கர்ப்பிணிகளுக்கு இரும்புசத்து குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. இன்றைய முன்னேற்றமிக்க காலக்கட்டங்களிலும், இரும்புச் சத்து குறைபாடு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது என்று செயின்ட் பியர் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் க்ரிஸ் போப் கூறுகிறார்.

இந்த ஆய்வை யுரோப்பியன் ஜர்னல் ஆஃப் எண்டோகிரைனாலஜி வெளியிட்டுள்ளது

English summary

Iron deficiency is a major issue among pregnant women

Iron deficiency is a major issue among pregnant women
Desktop Bottom Promotion