For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகள் கருச்சிதைவு மற்றும் குறைப்பிரசவத்தை உண்டாக்கும் என தெரியுமா?

|

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க பெண்கள் தங்களது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியிருக்கும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

இதனால் நோய்க்கிருமிகளின் தாக்கமும் அதிகம் இருக்கும். எனவே பெண்கள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் உணவுப் பொருட்களின் மூலம் கிருமிகளானது உடலினுள் சென்று கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

இங்கு கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும் கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபெடா சீஸ்

ஃபெடா சீஸ்

கர்ப்பிணிகள் ஃபெடா சீஸ் உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் லிஸ்டெரியா என்னும் பாக்டீயா உள்ளது. இது குறைப்பிரசவம் மற்றும் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா. வேண்டுமானால் சீடர் மற்றும் ஸ்விஸ் சீஸ் சாப்பிடலாம். முக்கியமாக சீஸ் வாங்கும் போது அதில் உள்ள டேபிளில் லிஸ்டெரியா-ப்ரீ சீஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என பாருங்கள்.

பச்சை பால்

பச்சை பால்

பச்சை பாலில் லிஸ்டெரியா, ஈ-கோலை, கேம்பைலோபேக்டர் போன்ற பாக்டீரியாக்கள் இருக்கும். இவை நஞ்சுக்கொடியைத் தாக்கி, குழந்தைக்கு நோய்த்தொற்றை உண்டாக்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

கடல் உணவுகள்

கடல் உணவுகள்

கடல் உணவுகளை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதில் பாக்டீரியாக்கள் மற்றும் மெர்குரி அதிகம் இருக்கும். எனவே இதனை அதிகம் உட்கொள்ளும் போது, அதனால் நரம்பு மண்டலம் நஞ்சடையக்கூடும். வேண்டுமானால் மாதத்திற்கு ஒருமுறை சுத்தமான நீரில் வளர்க்கப்பட்ட மீனை சமைத்து சாப்பிடலாம்.

சமைக்கப்படாத உணவுகள்

சமைக்கப்படாத உணவுகள்

கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளை நன்கு முழுமையாக சமைத்து தான் சாப்பிட வேண்டும். குறிப்பாக முட்டை, இறைச்சி போன்றவற்றை நன்கு சமைத்து தான் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் கருப்பையில் வளரும் குழந்தையைத் தாக்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

பதப்படுத்தப்பட்ட ஜூஸ்கள்

பதப்படுத்தப்பட்ட ஜூஸ்கள்

டின்களில் அடைத்து விற்கப்படும் ஜூஸ்களில் கெமிக்கல்கள் மட்டுமின்றி, குழந்தையின் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் மோசமான கிருமிகள் இருக்கும். இதனை கர்ப்பிணிகள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால் வீட்டிலேயே பழச்சாறுகளைத் தயாரித்து பருகுங்கள். அப்படி பழங்களை ஜூஸ் போடும் முன், நீரில் நன்கு சுத்தமாக கழுவுங்கள்.

பப்பாளி மற்றும் அன்னாசி

பப்பாளி மற்றும் அன்னாசி

இந்த பழங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும். ஆகவே இந்த பழங்களை கர்ப்ப காலத்தில் பெண்கள் உட்கொள்ளாமல் இருப்பது, குழந்தைக்கு நல்லது. இல்லாவிட்டால், கருச்சிதைவை சந்திக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Can Be Dangerous During Pregnancy

Here are some foods that can be dangerous during pregnancy. So make sure you completely avoid these foods.
Desktop Bottom Promotion