For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் சாப்பிடும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டிய உணவுகள்!

|

முதன்முறையாக கர்ப்பமாகியுள்ள பெண்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதல் முறை கர்ப்பமாகி இருக்கும் பெண்களுக்கு எந்த உணவுப் பொருளை சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்று தெரியாது.

அதுவும் இன்றைய காலத்தில் கூட்டுக்குடும்பம் என்பது மிகவும் குறைவு. பெரும்பாலான தம்பதிகள் தனிக் குடித்தனம் தான் இருக்கிறார்கள். இதனால் பெரியோர்களின் அறிவுரை கிடைக்கப் பெறாமல், கர்ப்பமானால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று தெரியாமல் இருப்பார்கள்.

அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு கர்ப்ப காலத்தில் சாப்பிடும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீன்

மீன்

சில பெண்களுக்கு மீன் அலர்ஜியாக இருக்கும். அத்தகைய பெண்கள் என்ன தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரோட்டீன் இருந்தாலும் தவிர்க்க வேண்டும். அதற்கு சிறந்த மாற்றாக, அதே சத்துக்கள் நிறைந்த தயிர் மற்றும் ஆளி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பப்பாளி

பப்பாளி

கர்ப்பிணிகள் அளவாக பப்பாளி சாப்பிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லப்பட்டாலும், பப்பாளி விதை மற்றும் பச்சையான பப்பாளியை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள லேடெக்ஸ், கருப்பையைச் சுருங்கச் செய்து, கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.

பான்

பான்

பல பெண்களுக்கு பான் கருப்பையை சுருங்கச் செய்யும் மற்றும் பிரசவ வலியைத் தூண்டி விடும். எனவே தான் சில பகுதிகளில் பிரசவத்திற்கு முன் கர்ப்பிணிகளுக்கு பான் சாப்பிடக் கொடுக்கப்படுகிறது. இருந்தாலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் பான் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்

சோயாபீன்

சோயாபீன்

கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களை சமநிலையாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். சோயாபீன்ஸில் புரோஜெஸ்டிரோன் உள்ளது. இது உடலில் ஈஸ்ட்ரோஜென் செயல்பாட்டைத் தூண்டி, ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாத காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருந்தால், அது குமட்டலை ஏற்படுத்தும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

கர்ப்பிணிகள் க்ரீன் டீ குடிக்கும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் க்ரீன் டீயில் உள்ள காப்ஃபைன், உடல் கருவளர்ச்சிக்குத் தேவையான போலிக் அமிலத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்திவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods Every Pregnant Woman Must Have With Absolute Caution!

Here are some foods that every pregnant woman must have with absolute caution. Read on to know more...
Story first published: Saturday, October 8, 2016, 14:12 [IST]
Desktop Bottom Promotion