For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் அதிகமாக காப்ஃபைனால் ஏற்படும் உடல்நல தாக்கங்கள்!!!

By Super
|

கர்ப்ப காலம் என்றாலே ஒரு பெண் கவனமாக இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். அது தான் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானது. இந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது தாய்க்கும் மட்டுமல்லாது வயிற்றில் உள்ள சிசுவிற்கும் மிக முக்கியமாகும். சில கர்ப்பிணி பெண்களுக்கு தாங்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்கிறோம் என்பது தெரியாமலேயே அதனை உட்கொண்டு வருவார்கள். அதனால் அவர்களின் உடல்நலன் மட்டுமல்லாது வயிற்றில் உள்ள குழந்தையின் உடல் நலத்தையும் பாதிக்கும்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது உங்களையும் சரி உங்கள் வயிற்றில் உள்ள குழந்தையையும் சரி, ஆரோக்கியமாகவும் திடமாகவும் வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கஷ்டமாக இருந்தாலும் சரி, இந்நேரத்தில் புகைப்பிடிப்பது, மது மருந்துவது போன்ற சில கெட்ட பழக்க வழக்கங்களை விட்டு விட வேண்டியது கண்டிப்பான ஒன்றாகும். மேலும் காப்ஃபைன் கலந்துள்ள பானங்களை தவிர்ப்பதும் நல்லதாகும்.

காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காபியை கைவிட தயக்கமாக தான் இருக்கும். ஆனால் காபியில் உள்ள காப்ஃபைனால் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பல இடர்பாடுகள் ஏற்படலாம். அதுவும் அதிகமாக உட்கொள்ளும் போது, காப்ஃபைனால் கருச்சிதைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காப்ஃபைன் என்பது ஒரு ஊக்கியாகவும் சிறுநீர்ப் பெருக்கியாகவும் செயல்படும். காப்ஃபைன் ஒரு ஊக்கியாக இருப்பதால் அது உங்கள் இரத்த அழுத்தத்தையும் இதய துடிப்பையும் அதிகரிக்கும். இது இரண்டுமே கர்ப்ப காலத்தின் போது பரிந்துரைக்கப்படுவதில்லை. காப்ஃபைன் குடிப்பதால் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறையும். அதனால் கர்ப்ப காலத்தில் காப்ஃபைனால் ஏற்படும் ஆபத்தான தாக்கங்களை பற்றி பார்க்கலாமா?

 Ill-effects Of Excess Caffeine During Pregnancy

1. உடல் எடை குறைவு

தினமும் 100 மி.கி. அளவில் காப்ஃபைனை உட்கொள்ளும் போது, குழந்தையின் எடை 21 கிராம் முதக் 28 கிராம் வரை குறையும்.

2. கரு வளர் காலம் அதிகரிக்கும்

காப்ஃபைன் பருகும் போது எதிர்ப்பார்த்த காலத்தை விட கருவளர் காலம் அதிகரிக்கும். நீங்கள் தினமும் 100 மி.கி. அளவில் காப்ஃபைனை உட்கொள்ளும் போது உங்கள் கருவளர் காலம் 5 மணிநேரத்திற்கு நீடிக்கும்.

3. உடல்நல பிரச்சனைகள்

உங்கள் குழந்தைக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

4. பிற ஆபத்தான பொருட்கள்

காபியில் காப்ஃபைன் தவிர நிலைமையை மோசமாக்கும் பிற பொருட்களும் அடங்கியுள்ளது. இந்த பொருட்கள் கரு வளர் காலத்தை அதிகரிக்கும்.

5. கருச்சிதைவு

கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில், காப்ஃபைனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, சில நேரங்களில் கருச்சிதைவு ஏற்படலாம்.

6. தூக்கமின்மை

அளவுக்கு அதிகமாக காப்ஃபைனை உட்கொள்ளும் தாய்மார்கள், பிரசவத்திற்கு பிறகு தூக்கமின்மை பிரச்னையை சந்திப்பார்கள்.

7. இரும்புச்சத்து உறிஞ்சுதல் குறையும்

காப்ஃபைனில் ஃபெநோல்ஸ் என்ற பொருள் உள்ளது. இது நம் உடல், இரும்பை உறிஞ்சுவதை குறைக்கச் செய்யும். கஃ ப்பைன் உட்கொள்ளுதலை தவிர்ப்பதற்கான மற்றொரு முக்கிய காரணம் இது. பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு இரும்பின் அளவு குறைவாக இருக்கும். அதனால் தான் அவர்களுக்கு அயர்ன் மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. இந்நேரத்தில் காப்ஃபைனை உட்கொண்டு வந்தால் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவது குறையும்.

8. அதிகரிக்கும் இதயத் துடிப்பும் இரத்தக் கொதிப்பும்

காப்ஃபைன் பருகும் போது இரத்த அழுத்தமும் இதயத் துடிப்பும் அதிகரிக்கும். கர்ப்ப காலத்தின் போது இவை ஆபத்தானது.

9. டீஹைட்ரேஷன்:

காப்ஃபைன் உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செய்யும். இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து விடும்.

கர்ப்ப காலத்தில் எந்தளவு காப்ஃபைன் பாதுகாப்பானது

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு 300 மி.கி. வரையிலான காப்ஃபைனை பருகலாம் என கூறப்படுகிறது. சராசரியாக 100 மி.கி. முதல் 200 மி.கி. வரை இருக்கும்.

பிரசவத்திற்கு பிறகு கப்பைன் குடிக்கலாமா?

பிரசவத்திற்கு பிறகும் கூட, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை, காப்ஃபைன் பருகுவதை நிறுத்தி விடுவது நல்லதாகும். அதற்கு முக்கிய காரணமே, குழந்தைகளுக்கு காப்ஃபை சுலபத்தில் செரிமானம் ஆகாததால், அவர்களுக்கு எரிச்சல் ஏற்படும்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பமாக இருக்கும் போது காப்ஃபைன் பருகுவதை நிறுத்துவது நல்லது. காபியில் அளவுக்கு அதிகமான கப்பைன் உள்ளது. அதனால் கர்ப்பமான உடனேயே காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விடுவது நல்லது. காப்ஃபைன் பருகுவதை நிறுத்த முடியவில்லை என்றால், ஒரு நாளைக்கு 300 மி.கி. வரை மட்டுமே பருகுவதை உறுதி செய்யுங்கள். கர்ப்ப காலத்தில் நீங்கள் போதிய உடல் எடையை பெறவில்லை என்றால், அதற்கு காப்ஃபைன் பருகுவதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

காப்ஃபைன் உள்ள அனைத்து வகையான பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. கேக், காபி, சோடா பானங்கள் போன்ற கோகோ உணவுகள், சாக்லேட் போன்றவைகளும் இதில் அடங்கும். மேலும் நீங்கள் உற்கொள்ளும் உணவுகளிலும் அதிக அளவில் காப்ஃபைன் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காபியை காட்டிலும் தேநீர் சிறந்ததாகும். காபியில் மட்டுமே காப்ஃபைன் இருக்கும் என நினைக்காதீர்கள்.

English summary

Ill-effects Of Excess Caffeine During Pregnancy

Caffeine has been associated with a number of prenatal risks. When consumed in high doses, caffeine has even been linked with increased rates of miscarriage. Here are some ill effects of Excess Caffeine During Pregnancy.
Story first published: Sunday, February 1, 2015, 9:38 [IST]
Desktop Bottom Promotion