For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுகப்பிரவத்தின் மூன்று கட்டங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

By Super
|

கர்ப்பம் என்பது ஒரு தம்பதியின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான கட்டமாகும். பிறக்க போகும் குழந்தையை எதிர்ப்பார்க்கும் தாய்மார்களுக்கு பிரசவ நேரம் நெருங்க நெருங்க, உணர்ச்சியும் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். இது இயல்பான உணர்வே. மகப்பேறு மருத்துவர்களின் படி, முழுமையான ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முழுதாக 9 மாதங்கள் தேவைப்படும். இந்த ஒன்பது மாதங்களில் குழந்தையை எதிர்ப்பார்க்கும் தாயும் அந்த குடும்பமும் பல சந்தோஷமான மற்றும் சோகமான தருணங்களை சந்திக்க வேண்டி வரும். ஆனால் பிரசவம் என வந்து விட்டால், அது தான் மிகவும் வலிமிக்கதாகும்.

பிரவத்திற்கான கட்டங்கள் சில நாட்கள் மட்டுமே. சில சமயம் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இன்னும் சில அதிர்ஷ்டசாலிகளுக்கு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். இயற்கையான முறையில் சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களுக்கு, பிரசவத்திற்கான கட்டம் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஆனால் அதன் முடிவில் விலை மதிப்பில்லாதா அந்த பச்சிளம் குழந்தையை கையில் தூக்கும் போது அனைத்து வலியும் மறந்து சந்தோஷ வெள்ளத்தில் மிதந்திடுவர்.

சிசேரியன் முறையில் பிரசவம் என்றால் சுகப்பிரசவத்தில் ஏற்படும் அளவு வலி ஏற்படுவதில்லை. அதற்கு காரணம் பிரசவத்திற்கான முறையும் கட்டங்களும் மாறுபடும். சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை பிரசவம் என்றால் கர்ப்பிணி பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். இது முதுகு தண்டு வழியாக செலுத்தப்படும். இந்த மயக்க மருந்து உடலின் கீழ் பகுதியை மரத்து போக செய்துவிடும். அதன் பின் 15 நிமிடங்களுக்குள் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை வெளியே எடுத்து விட வேண்டும்.

சுகப்பிரசவத்தில் ஒரு கர்ப்பிணி பெண் கடக்க வேண்டிய மூன்று கட்டங்களை அவர் அறியாமல் இருந்தால், இந்த கட்டுரை அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். பிரசவ வலிக்கான அறிகுறி மற்றும் அதன் நீளத்தைப் பற்றி தாயாகப் போகும் பெண்கள் மேலும் படித்து தெரிந்து கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரசவத்திற்கான அறிகுறி

பிரசவத்திற்கான அறிகுறி

கருப்பையில் அழுத்தம் அதிகரிக்கும் போது, ஆற்றல் திறன்களில் மாற்றம் ஏற்பட்டு இரத்தம் கலந்த சளி வெளியேறினால், கருவில் உள்ள குழந்தை வெளியேறுவதற்கான நேரம் இது. சுருக்கங்களின் நேரத்தை குறித்துக் கொள்வதும் மிகவும் முக்கியமாகும். பிரசவத்தை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம்:

பிரசவத்தின் முதல் கட்டம்

பிரசவத்தின் முதல் கட்டம்

பிரசவத்தின் முதல் கட்டம் என்பது பிரசவத்தின் தொடக்கமாகும். இந்த கட்டத்தில் கருப்பை வாய் முழுமையாக விரிவாகும். பிரசவத்தின் முதல் கட்டத்தை மேலும் மூன்று கட்டங்களாக பிரிக்கலாம்: ஆரம்ப பிரசவம், தீவிர பிரசவம், இடைநிலை பிரசவம்.

ஆரம்ப பிரசவம்

ஆரம்ப பிரசவம்

பிரசவ கட்டங்களில் மிகவும் வலிமிக்கதாக இருப்பது இந்த கட்டம் தான். இந்த நேரத்தில் தான் கருப்பை வாய் சன்னமானதாக மாறி, விரிவடையும். கருப்பை வாய் குறைந்தது 3-4 சென்டிமீட்டர் வரை விரிவடைய வேண்டும். ஆரம்ப பிரசவ கட்டம் என்பது சில வாரங்கள், நாட்கள் மற்றும் சில மணி நேரங்கள் வரை நீடிக்கலாம்.

தீவிர பிரசவம்

தீவிர பிரசவம்

பிரசவத்தின் இந்த கட்டத்தில், சுருக்கமும் வலியும் தீவிரமடையும். கருப்பை வாய் 10 சென்டிமீட்டருக்கு விரிவடையும்.

இடைநிலை பிரசவம்

இடைநிலை பிரசவம்

இடைநிலை பிரசவ கட்டத்தில், சுருக்கங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும். இது 2-3 நிமிடங்களுக்குள் நடந்து முடியும். ஒவ்வொரு கட்டத்திலும், வலியும் சுருக்கங்களும் தலா 90 நொடிகள் வரை நீடிக்கும்.

பிரசவத்தின் இரண்டாம் கட்டம்

பிரசவத்தின் இரண்டாம் கட்டம்

பெரும்பாலான தாய்மார்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் கட்டம் தான் இது. இந்த கட்டத்தில், கருப்பை வாய் முழுமையாக விரிவடைந்து விடும். கருப்பையில் இருந்து குழந்தை வெளியே வருவதற்கு தயாராகிவிடும். பிரசவத்தின் இந்த கட்டத்தில் உள்ள பெண்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும், வலியைப் பொறுத்துக் கொண்டும் இருக்க வேண்டும். (குழந்தையின் தலை பெண்ணுறுப்பில் இருந்து வர தொடங்கியவுடன் அந்த பெண்ணிற்கு அவளின் கருப்பையில் லேசான எரிச்சலும் கூச்ச உணர்வும் ஏற்படும்).

பிரசவத்தின் மூன்றாம் கட்டம்

பிரசவத்தின் மூன்றாம் கட்டம்

நஞ்சுக்கொடியை பிரசவித்தல் - குழந்தையைப் பிரசவித்த பிறகு, கருப்பையில் இருந்து நஞ்சுக்கொடியையும் எடுத்தாக வேண்டும். பிரசவத்தின் இந்த கட்டத்தை சிலர் "இரண்டாம் குழந்தையின் பிரசவம்" என்றும் அழைக்கின்றனர். இந்த கட்டத்தின் போது, லேசான சுருக்கங்களைப் பெண்கள் அனுபவிக்க வேண்டி வரும். கருப்பை சுவரில் இருந்து நஞ்சுக்கொடி தானாக பிரிந்து கொள்ளும். பின் பெண்ணுறுப்பின் வழியாக வெளியேறும். அதன் பின் அறுவை சிகிச்சை வாயிலாக அதனை வெட்டி நீக்கி விடுவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do You Know The 3 Stages Of Labour?

Do you know the three stages of labour and delivery? Here are some of the things pregnant women should keep in mind. Take a look:
Desktop Bottom Promotion