For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட நேர பிரசவ வலியில் இருந்து தப்பித்து எளிதில் பிரசவம் நடைபெற மேற்கொள்ளும் வழிகள்!!!

By Maha
|

பிரசவம் என்பது அவ்வளவு சுலபமான ஒன்று அல்ல. பலர் திரைப்படத்தில் பிரசவ வலி வந்ததும், மருத்துவமனைக்கு அழைத்து சென்றதும் உடனே குழந்தை பிறந்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. பிரசவம் எளிதில் சீக்கிரம் நடைபெற வேண்டுமானால், கர்ப்பிணிகள் ஒருசில செயல்களை செய்து வர வேண்டும். அதிலும் பிரசவம் நெருங்கும் நேரத்தில் செய்ய வேண்டும்.

பொதுவாக முதன்முறையாக கருத்தரித்தவர்களுக்கு பிரசவ வலியானது ஒரு நாள் முழுவதும் கூட இருக்கும். அதுவே இரண்டாம் முறையாக பிரசவத்தை சந்திப்பவர்களுக்கு 6-12 மணிநேரம் பிரசவ வலியானது நீடித்திருக்கும். இதனால் பல மருத்துவர்கள் கர்ப்பிணிகளை பிரசவம் நெருங்கும் வேளையில் செய்ய சொல்வார்கள். அவற்றை செய்து வந்தால், அதிக நேரம் பிரசவ வலியை சந்திக்காமல் விரைவில் சுகப்பிரசவம் நடைபெறும்.

இங்கு நீண்ட நேர பிரசவ வலியில் இருந்து தப்பித்து விரைவில் பிரசவம் நடைபெற மேற்கொள்ளும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மருத்துவரிடம் கேட்டு கலந்தாலோசித்து பின் முயற்சியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாக்கிங்

வாக்கிங்

பிரசவ காலம் நெருக்கும் நேரம் கர்ப்பிணிகள் அதிகமாக வாக்கிங் சென்றால், புவிஈர்ப்பு விசையானது வயிற்றினுள் உள்ள குழந்தையை கீழ் நோக்கி இழுக்கும். இதனால் கருப்பை இறுக்கமடைய ஆரம்பித்து, குழந்தையை கீழ்நோக்கி நகர உதவிபுரியும். இதன்மூலம் விரைவில் பிரசவம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

சிறுநீர்ப்பையை காலியாக்குங்கள்

சிறுநீர்ப்பையை காலியாக்குங்கள்

சிறுநீர்ப்பையானது நிரம்பியிருந்தால், குழந்தையினால் கீழ்நோக்கி நகர முடியாது. எனவே பிரசவ காலம் நெருங்கும் போது அவ்வப்போது சிறுநீர் கழித்து, சிறுநீர்ப்பையை காலியாக வைத்திருக்க வேண்டும். இதனால் குழந்தை ஈஸியாக கீழ்நோக்கி நகர உதவியாக இருக்கும்.

வெதுவெதுப்பான நீர் குளம்

வெதுவெதுப்பான நீர் குளம்

உங்களால் முடிந்தால், தினமும் இரவில் அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் சிறிது நேரம் உட்காருங்கள். இதனால் கருப்பையானது சுருங்க ஆரம்பித்து, விரைவில் பிரசவம் நடைபெற உதவும்.

பிரசவ வலியைத் தூண்டும் ஜெல்

பிரசவ வலியைத் தூண்டும் ஜெல்

ஒருவேளை உங்களின் பிரசவமானது தாமதமானால், அப்போது பிரசவ வலியைத் தூண்டி விரைவில் பிரசவம் நடைபெற ஒரு ஜெல்லானது யோனி வழியாக உள்ளே செலுத்தப்படும். இந்த ஜெல் பிரசவ வலியைத் தூண்டி சீக்கிரம் பிரசவம் நடைபெற உதவும்.

செயற்கை முறையில் பனிக்குட நீரை வெளியேற்றுவது

செயற்கை முறையில் பனிக்குட நீரை வெளியேற்றுவது

சில நேரங்களில் பனிக்குட நீர் வெளியேறாமல் பிரசவ வலியானது நீண்ட நேரம் நீடித்திருந்தால், அப்போது செயற்கை முறையில் ஒருவித பிஞ்சரின் உதவியுடன் பனிக்குட நீரை வெளியேற்றுவார்கள்.

லங்கஸ்

லங்கஸ்

பிரசவ காலத்தில் உங்கள் வயிற்றில் குழந்தை சரியான நிலையில இல்லாவிட்டால், அப்போது பெரிய பந்தினை பிடித்துக் கொண்டு, உட்கார்ந்து எழ வேண்டும். இதனால் குழந்தையினால் சரியான நிலைக்கு வந்து, சீக்கிரம் பிரசவம் நடைபெறும்.

ஆக்சிடோசின் ஹார்மோன் ஊசி

ஆக்சிடோசின் ஹார்மோன் ஊசி

சிலருக்கு பிரசவ வலியே வராமல் இருக்கும். அத்தகையவர்களுக்கு ஆக்சிடோசின் ஹார்மோன் ஊசியானது இரத்த நாளங்களில் போடப்படும். இவை பிரசவ வலியைத் தூண்டி, பிரசவம் நடைபெற உதவும்.

ரொமான்ஸ் செய்யுங்கள்

ரொமான்ஸ் செய்யுங்கள்

பிரசவ காலம் நெருங்கும் நேரம் உடலுறவில் ஈடுபட முடியாது. இருப்பினும், பிரசவ காலத்தின் போது கணவருடன் ரொமான்ஸ் செய்வதன் மூலம், உடலின் வெப்பநிலையானது அதிகரித்து, ஆக்சிடோசின் ஹார்மோனானது இயற்கையாக வெளிப்பட்டு பிரசவ வலியைத் தூண்டி, பிரசவம் எளிமையாக நடைபெற உதவியாக இருக்கும்.

ஸ்குவாட்ஸ்

ஸ்குவாட்ஸ்

பந்து பயன்படுத்தி செய்யப்படும் ஸ்குவாட்ஸ் மற்றம் கர்ப்பிணிகளுக்கான அடிவயிற்றினை அழுத்துமாறான உடற்பயிற்சியை செய்து வந்தால், கருப்பை சுருங்கி, குழந்தை சீக்கிரம் பிறப்பு வழிப்பாதையில் வர உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Speed Up Labour Pain

The ways to speed up labour will help to give birth quickly. Know these natural ways to speed up the process of giving birth.
Desktop Bottom Promotion