For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பது பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!!

By Ashok CR
|

கர்ப்ப காலத்தின் போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் பல சோதனைகளை நீங்கள் செய்தாக வேண்டியிருக்கும். இவையனைத்தும் தாய் மற்றும் சேயின் நலனிற்காக செய்யப்படும் சோதனைகளாகும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்பது கர்ப்ப காலத்தில் முக்கிய அங்கமாக வகிக்கிறது.

பிறவிக்குறை, கர்ப்பகாலத்தின் போது சிசுவின் பிறழ்வான வளர்ச்சி, சிசுவின் இயல்பான உடல் வளர்ச்சி போன்றவைகளை கண்டறிந்து கண்காணிக்கவே இவ்வகை ஸ்கேன்கள் எடுக்கப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் இந்த 9 மாதத்தில் உங்கள் வயிற்றை குறைந்தது நான்கு முறையாவது ஸ்கேன் செய்ய வேண்டி வரும்.

கர்ப்பிணிகள் எதுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யணும் தெரியுமா?

இதனால் உங்கள் குழந்தையை, கருப்பு வெள்ளை நிழல் போன்ற உருவத்தில் திரையில் நீங்கள் கண்டு களிக்கவும் செய்யலாம். குழந்தையின் நலனை ஒரு அலாரம் போல் உங்களுக்கு காட்டவும் அல்ட்ரா சவுண்ட் உதவுகிறது.

Ultrasounds During Pregnancy – Everything You Need To Know

கர்ப்ப காலத்தின் போது அல்ட்ரா சவுண்ட்டின் முக்கியத்துவம்:

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு கட்டத்தில் எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், உங்கள் குழந்தையின் உடல்நலம் மற்றும் அதன் வளர்ச்சிகளை உங்களுக்கு எடுத்துரைக்கும். கர்ப்ப காலத்தின் போது கீழ்கூறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் செய்யப்படும்:

வியபிளிடி ஸ்கேன் (Viability Scan)

கர்ப்ப காலத்தின் 6 மற்றும் 10 ஆவது வாரத்தில் எடுக்கப்படும் இந்த ஸ்கேன், கர்ப்பத்தின் வளர்வீத முறை, குழந்தையின் இதய துடிப்பு மற்றும் தாயின் வயிற்றில் உள்ள சிசுவின் எண்ணிக்கையை கூறும்.

நியூக்கல் ட்ரான்ஸ்லூசென்சி ஸ்கேன் (Nuchal Translucency Scan)

கர்ப்ப காலத்தின் 12 ஆவது வாரத்தில் எடுக்கப்படும் இந்த ஸ்கேன் மூலம் சிசுவின் உடல்நலத்தை கண்டறியலாம். மேலும் ஏதேனும் க்ரோமோசல் பிறழ்வுகள் மற்றும் டவுன் சிண்ட்ரோம்களால் சிசு பாதிக்கப்பட்டிருந்தால் அதனையும் கண்டுபிடித்து விடலாம். சிசுவிற்கு ஏற்படும் பிரச்சனைகளை வெகு விரைவிலேயே கண்டு பிடித்து விடுவதால், அதனை குணப்படுத்தி விடலாம். இதனால் இது ஒரு முக்கியமான ஸ்கேனாக பார்க்கப்படுகிறது.

அனாமலி ஸ்கேன் (Anomaly Scan)

18 மற்றும் 20 ஆம் வாரத்தில் எடுக்கப்படும் இந்த ஸ்கேன், சிசுவின் உடல் கூறு மற்றும் நஞ்சுக்கொடியின் அமைப்பு போன்றவைகளை பற்றி விவரமாக தெரிவிக்கும். மூளை, முகம், முதுகெலும்பு, இதயம், வயிறு, கிட்னி, கை கால்கள் மற்றும் உடலின் இதர அங்கங்களின் வளர்ச்சியை பற்றிய விவரத்தையும் அளிக்கும். பனிக்குட நீரின் அளவை தெரிந்து கொள்ளவும் இது உதவும். குழந்தையின் வளர்ச்சி வேகத்தையும் தெரியப்படுத்தும்.

ஃபீடல் எக்கோகார்டியோகிராஃபி (Fetal Echocardiography)

சிசுவின் இதயம் மற்றும் அதன் கலன்களை பற்றி விவரமான சோதித்தல் 20 மற்றும் 22 ஆம் வாரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் நடக்கும். அனாமலி ஸ்கேனில் குழந்தையின் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை கண்டறியப்பட்டால், இந்த ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்படுவார்கள்.

பீடல் வெல்பீயிங் (Fetal Wellbeing)

28 முதல் 39 வாரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இந்த ஸ்கேன் எடுக்கப்படும். இதன் பெயர் சொல்வதை போல், குழந்தையின் உடல் நலத்தை சோதிப்பதற்காகவே இந்த ஸ்கேன் எடுக்கப்படுகிறது. மேலும் சிசுவின் இருக்கை நிலையை தெரிந்து கொள்ளவும் இந்த ஸ்கேன் உதவி புரியும்.

கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் எப்படி எடுக்கப்படுகிறது?

கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில், அனைத்து அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்களும் வயிற்றுச் சுவர் வழியாக மட்டுமே எடுக்கப்படும். ஆனால் கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில், யானிவழியாக சோதனை மேற்கொள்ளப்படும்.

வயிற்றுச் சுவர் வழியாக எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் (Transabdominal Ultrasounds)

இவ்வகை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்களில், ஜெல் போன்ற ஒன்றை உங்கள் வயிற்றின் மீது மருத்துவர் தடவுவார். பின் கையில் வைத்திருக்கும் ட்ரான்ஸ்ட்யூசர் கருவியை கொண்டு, வயிற்றில் மெதுவாக நகர்த்தி, குழந்தையின் அசைவுகளை கண்காணிக்கலாம். அங்கே வைக்கப்பட்டிருக்கும் திரையில், நடக்கும் அனைத்தையும் நீங்கள் காணலாம். இது உங்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தாததால் இவ்வகை ஸ்கேன்கள் மிகவும் பாதுகாப்பானதாகும்.

யானிவழி ஸ்கேன்கள் (Transvaginal Ultrasounds)

இவ்வகை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்களில், நீண்ட குறுகிய ட்ரான்ஸ்ட்யூசர் கருவி உங்கள் பெண்ணுறுப்பில் விடப்படும். பொதுவாக கருத்தடைஉறையால் இது மூடப்பட்டிருக்கும். மேலும் சுலபமாக உள்ளேற ஜெல் தடவ பட்டிருக்கும். இது அவ்வளவு சவுகரியத்தை கொடுப்பதில்லை. ஆனால் ஆரம்பகால குழந்தை மற்றும் அதன் வளர்ச்சியை இதுவே தெளிவாக காட்டும்.

ஸ்கேன் எடுப்பதற்கு எப்படி தயாராக வேண்டும்?

1. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும் போது, உங்கள் வயிற்று பகுதியை சுலபமாக வெளிகாட்டும் விதமாக அமையும் லூசான ஆடைகளை அணியுங்கள்.

2. போதுமான அளவிற்கு தண்ணீரை பருகுங்கள். அதனால் உங்கள் கருப்பையின் நீரால் நிறையும். நீர்ப்பை முழுவதுமாக நிறையும் போது, குழந்தையின் உருவம் தெளிவாக தெரியும்.

3. யானிவழி அல்ட்ரா சவுண்ட் எடுப்பதற்கு நேரெதிரான வழிமுறையை பின்பற்ற வேண்டும். சோதனை மேஜையில் படுக்கும் போது அமைதியுருங்கள். ட்ரான்ஸ்ட்யூசர் கருவியை நுழைக்கும் போது வலி ஏற்படும். உடலின் கீழ் பகுதியை ரிலாக்ஸ் செய்து, கருவி உள்ளேறும் வரை திடமாக இருங்கள். உடலின் கீழ்பகுதியை இறுக்கமாக வைத்திருந்தால் உங்களுக்கும் மருத்துவருக்கும் தொந்தரவாக அமையும். ஆழமாக சுவாசிப்பதால் உங்கள் அசவுகரியம் சற்று குறையும்.

Desktop Bottom Promotion