For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Ashok CR
|

ஒரு குழந்தை இல்லாமல் எந்த ஒரு பெண்ணும் முழுமை அடைவது கிடையாது. அப்படி ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்குள் அவள் படும் பாடு இருக்கே, அது சொல்லி தீராது. கர்ப்பமாவதில் இருந்து தன் குழந்தையை பெற்றெடுக்கும் வரை பெண்கள் படும் அவதி லேசு பட்டதல்ல. சும்மாவா சொன்னார்கள் - ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு பிரசவமும் மறு ஜென்மம் என்று. ஆனால் நாம் எந்த ஒரு முயற்சியையும் எடுக்காமல், எல்லாத்தையும் கடவுளின் கைகளில் விட்டு முடியாதல்லவா? கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு, கருவில் இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருப்பதற்கு, பிரசவம் சுலபமாகவும், வேகமாகவும் நடப்பதற்கு, பெண்கள் ஆரோக்கியமானதை உட்கொண்டு உடலுக்கும் வேலை கொடுக்க வேண்டும்.

கண்டிப்பாக கர்ப்ப காலத்தின் போது பெண்களிடம் கோபமான குறைகள் வந்த வண்ணம் இருக்கும். அதனை தடுப்பதற்கும், உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும், சுலபமான பிரசவத்திற்கும் என இன்னும் பல நன்மைகளுக்காக நீங்கள் செய்ய வேண்டியது - உடற்பயிற்சியில் ஈடுபடுவது. உடற்பயிற்சி என்பது அனைவரும் செய்ய வேண்டிய ஒன்றே. கர்ப்பிணி பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களுக்காக தனிப்பட்ட உடற்பயிற்சிகள் இருக்கிறது. அதனை செய்து வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு பலவித நன்மைகள் கிட்டும். அவைகளைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்ப கால சோர்வை எதிர்த்து போராடும்

கர்ப்ப கால சோர்வை எதிர்த்து போராடும்

கர்ப்பமான முதல் மூன்று மாத காலத்திலும், மூன்றாம் மூன்று மாத காலத்திலும் அதிக அளவிலான சோர்வை சந்திக்கக்கூடும். இது முரண்பாடானதாக இருந்தாலும் கூட, சில நேரங்களில் அதிகமாக ஓய்வு எடுத்தால் கூடுதல் அசதியை தான் ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் அதிகமாக சிரத்தை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் தான்; அதுவும் குறிப்பாக அதிக சோர்வு ஏற்படும் போது. ஆனால் கொஞ்சம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், உங்கள் ஆற்றல் திறன் அதிகரித்து, உங்களுக்குள் அதிக மாற்றத்தையே உண்டாக்கும். அதனால் குழந்தைகள் போல் நடை போடுங்கள் - சுலபமான நடை கொடுங்கள் அல்லது கர்ப்ப கால உடற்பயிற்சி வீடியோவை பார்த்து அதை செய்யுங்கள். அதற்கு பிறகு பிறக்கும் உற்சாகத்தை எண்ணி ஆச்சரியப்பட்டு போவீர்கள்.

கர்ப்ப காலத்தில் தூக்கத்தை மேம்படுத்துங்கள்

கர்ப்ப காலத்தில் தூக்கத்தை மேம்படுத்துங்கள்

கர்ப்பமான பல பெண்கள் தூங்குவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்ற பொதுவான குற்றச்சாட்டை கூறுவது இயல்பே. ஆனால் உடற்பயிற்சியில் (ராத்திரியில் வேண்டாம்; அது உங்கள் ஆற்றல் திறனை அதிகரித்து தூக்கத்தை கெடுத்து விடும்) ஈடுபடும் கர்ப்பிணி பெண்களை கேட்டுப் பாருங்கள், தங்களுக்கு நல்ல தரமுள்ள தூக்கம் கிடைக்கிறது என கூறுவார்கள். அதிகமான தூக்கம் கிடைக்கும் போது தானாகவே எழுந்திருக்கவும் செய்வார்கள்.

கர்ப்ப கால மலச்சிக்கலை வென்றிடுங்கள்

கர்ப்ப கால மலச்சிக்கலை வென்றிடுங்கள்

சுறுசுறுப்பான உடலுக்கு மலங்கழித்தல் எல்லாம் சிறப்பாகவே நடைபெறும். இது சீராக ஏற்பட சில பெண்கள், 30 நிமிடங்களுக்கு நடை கொடுப்பார்கள். சிலருக்கோ 10 நிமிடங்கள் நடந்தாலே போதுமானதாக இருக்கும்.

கர்ப்ப கால முதுகு உடற்பயிற்சிகளை செய்யுங்கள்

கர்ப்ப கால முதுகு உடற்பயிற்சிகளை செய்யுங்கள்

பாதிக்கு பாதியான கர்ப்பிணி பெண்கள் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். திடமான அடிவயிறு உங்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பாக அமையும். உங்கள் அடிவயிற்றை திடமாக வைத்துக் கொள்ள எளிமையான மற்றும் பாதுகாப்பான கர்ப்ப கால உடற்பயிற்சிகளை செய்யுங்கள். இது உங்கள் முதுகிற்கும் தக்க பாதுகாப்பை அளிக்கும். ஆனால் அதோடு நிறுத்தி விடாதீர்கள். வயிற்றுக்கான உடற்பயிற்சியோடு மட்டுமல்லாது, வேறு சில உடற்பயிற்சிகளையும் செய்யலாம். உதாரணத்திற்கு, அஞ்சலகம் வரை ஒரு சிறிய நடை, போன்றவைகள் உங்கள் வலியையும், அழுத்தத்தையும் போக்கும்.

கவலையை மறந்து, சந்தோஷமாக இருங்கள்

கவலையை மறந்து, சந்தோஷமாக இருங்கள்

உடற்பயிற்சிகள் செய்தால் உங்கள் மூளையில் என்டோர்ஃபின்ஸ் சுரக்கும். இது நல்ல உணர்வை ஏற்படுத்தும் ரசாயனமாகும். இது உங்கள் மனநிலையை மேம்படுத்தி, கவலை மற்றும் பதற்றத்தை நீக்கும்.

கர்ப்பகால சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும்

கர்ப்பகால சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும்

உடற்பயிற்சி செய்யும் போது இந்த பொதுவான பிரச்சனை தடுக்கப்படும். ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உடற்பயிற்சி ஒரு உதவிகரமான தெரபி என அமெரிக்கன் டையபெடிஸ் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது. உங்கள் பயிற்சியாளர் உங்களுக்கு உடற்பயிற்சி வழக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆரோக்கியமான குழந்தைகள்

ஆரோக்கியமான குழந்தைகள்

கர்ப்ப காலத்தின் போது எந்த சிசுக்களின் தாய்மார்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்களோ, அவர்களின் குழந்தைகள் எல்லாம் ஆரோக்கியமான எடையோடு பிறக்கும். மேலும் பிரசவமும் சுலபமாகும். அதேப்போல் பிரசவத்தினால் ஏற்படும் அழுத்தமும் வேகமாக குணமடையும்.

சுலபமான பிரசவம் (முடிந்த வரைக்கும்)

சுலபமான பிரசவம் (முடிந்த வரைக்கும்)

கர்ப்ப காலத்தின் போது உடற்பயிற்சியில் ஈடுபட்டால், பிரசவம் வேகமாக நடப்பதற்கும் மருத்துவ தலையீடுகள் (சிசேரியன் உட்பட) இல்லாமல் சுலபமான பிரசவம் நடப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 8 Benefits of Pregnancy Exercise

Pregnancy comes with its share of annoying complaints. But the more you exercise during pregnancy, the less you'll find to complain about.
Desktop Bottom Promotion