For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பாத வலியைத் தடுக்க சில டிப்ஸ்...

By Maha
|

கர்ப்பத்தின் போது பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அத்துடன் நிறைய பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். அந்த வகையில் பெண்கள் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் கால் மற்றும் பாத வலி. அதிலும் 5 மாத காலத்தில் இருந்து தான் பெண்கள் அதிகப்படியான வலியை உணர்வார்கள். இதற்கு முக்கிய காரணம், உடல் எடை அதிகரிப்பது தான்.

ஏனெனில் உடல் எடை அதிகரிக்கும் போது, குதிகால் மற்றும் பாதங்களில் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு, கடுமையான வலி ஏற்படக்கூடும். அதுமட்டுமல்லாமல், கால்களில் வீக்கங்களும் ஏற்படக்கூடும். இத்தகைய வலிக்கு உடல் எடை மட்டுமல்லாமல், வீக்கம், நீண்ட நேரம் நடப்பது, போதிய ஓய்வு இல்லாமை, குறைவான இரத்த ஓட்டம் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் போன்றவைகளும் காரணங்களாகும்.

இங்கு அந்த கால் மற்றும் பாத வலியைப் போக்குவதற்கான ஒருசில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை செய்து வந்தால், வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கால்களை உயரமான இடத்தில் வைக்கவும்

கால்களை உயரமான இடத்தில் வைக்கவும்

கால்களில் வீக்கம் மற்றும் வலி இருந்தால், உட்காரும் போது கால்களை உயரமான இடத்தில் வைக்க வேண்டும். இப்படி உட்கார்ந்தால், கால்களில் இரத்த ஓட்டம் சீராக இருந்து, வீக்கம் குறைந்து, கால்களில் வலி ஏற்படுவது குறையும்.

இடது பக்கம் தூங்கவும்

இடது பக்கம் தூங்கவும்

கர்ப்பிணிகள் தூங்கும் போது இடது பக்கமாக தூங்கினால், இதயம், கருப்பைக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இடது பக்கத்தில் தூங்கும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், இது கால்களில் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.

ஐஸ் பேக்குகள்

ஐஸ் பேக்குகள்

கால்களில் உள்ள வலியைப் போக்க, ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து, அதனைக் கொண்டு கால்களில் 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், வீக்கம் மற்றும் வலி குறையும்.

போதிய அளவு தண்ணீர் குடிக்கவும்

போதிய அளவு தண்ணீர் குடிக்கவும்

தண்ணீர் அதிகம் குடித்தாலும், கால்களில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுவது குறையும். எனவே கர்ப்ப காலத்தில் தண்ணீரை அதிகம் குடித்து வாருங்கள்.

உப்பை குறைக்கவும்

உப்பை குறைக்கவும்

கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு, கர்ப்பிணிகளுக்கு வீக்கத்தை ஏற்படுத்தி, கடுமையான வலியை உண்டாக்கும்.

மருத்துவரை சந்திக்கவும்

மருத்துவரை சந்திக்கவும்

எத்தனை இயற்கை சிகிச்சைகளைப் பின்பற்றியும், கால்களின் வலியில் எந்த ஒரு மாற்றமும் தெரியாவிட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பாத மசாஜ்

பாத மசாஜ்

பாதங்களுக்கு அவ்வப்போது மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் ஹீல்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Relieve Foot Pain During Pregnancy

To relieve foot pain during pregnancy, here are a few tips. Relieving sore feet during pregnancy is important to avoid any other complications. Read more on how to get rid of foot pain during pregnancy.
Story first published: Saturday, February 15, 2014, 15:19 [IST]
Desktop Bottom Promotion