For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதற்கான சில டிப்ஸ்...

By Ashok CR
|

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள், பல விதமான உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களை சந்திப்பார்கள். கர்ப்பத்தோடு சம்பந்தப்பட்டுள்ள ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களின் காரணமாகவே இவ்வகை மாற்றங்கள் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருந்திட இவ்வகை ஹார்மோன் மாற்றங்கள் அவசியமான ஒன்றே.

ஆனால் அதே நேரம், கர்ப்ப காலத்தில் சில கஷ்டங்களையும் நீங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். கர்ப்ப காலத்தில், அனேகமாக அப்படி அனைத்து பெண்கள் சந்திக்கும் முக்கியமான ஒரு பிரச்சனை தான், மென்மையாக மாறும் மார்பக காம்பு.

இதுப்போன்று சுவாரஸ்யமானவை: கர்ப்பிணிகளே! நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு உங்கள் உடல் தயாராகிக் கொண்டிருக்கும். இதற்கு சம்பந்தமான உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், மார்பக காம்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். மார்பக காம்புகளின் அளவு பெரிதாவது அல்லது மிகவும் மென்மையாக மாறுவது போன்றவைகளே மார்பக காம்புகளில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்.

பிரசவ நேரம் நெருங்கும் வேளையில், உங்கள் மார்பக காம்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் உருவத்திலும் அளவிலும் மாற்றங்கள் ஏற்படும். சில நேரம் காம்பிலிருந்து கடும்புப்பால் எனப்படும் மஞ்சள் நிற திரவம் வெளியேறும். உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நேரம் நெருங்குவதற்கான அறிகுறிகளே இவைகள்.

Tips For Nipple Care During Pregnancy

கர்ப்ப காலத்தில் கஷ்டப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கவலை தேவையில்லை. கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை பரமாரிக்க சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதுமானது. அவ்வாறான சில ஐடியாக்களை பற்றி இப்போது பார்க்கலாமா?

வசதியான ப்ராவை அணியுங்கள்

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான ப்ராவை (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கும். மென்மையான பருத்தியால் செய்த பிராவை வாங்கி அணியுங்கள். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் வேளையில் தணிப்பு (பேடெட்) பிராவை தவிர்க்கவும்.

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள்

ஆலிவ் எண்ணெய்யை கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்வது கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் பராமரிப்புக்கு சிறந்த ஐடியாவாகும். இப்படி செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்து நிற்க உதவும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான வறண்ட சருமத்தால் உண்டாகும் பல பிரச்சனைகளையும் அது தடுக்கும்.

காம்புகளின் மீது சோப்பு கூடாது

மார்பக காம்புகளின் மீது சோப் பயன்படுத்தாதீர்கள். அப்படி செய்தால் காம்புகள் வறண்டு போய் விடும். அளவுக்கு அதிகமாக வறண்டு போகும் போது வெடிப்புகள் உண்டாகி விடும். அதனால் வாசனையுள்ள சோப்புக்கு பதிலாக நல்லொதொரு மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்துங்கள். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பரமாரிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ் இது.

மாய்ஸ்சுரைசிங் க்ரீம்

மார்பக காம்புகள் வறட்சியாக இருந்தால் நல்லதொரு மாய்ஸ்சுரைசிங் க்ரீம் அல்லது லோஷனை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் மார்பக காம்புகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள், முக்கியமாக கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளுக்கு தடவுவதற்காகவே சந்தையில் விற்கப்படுகிறது.

காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள்

மார்பக காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. இது காம்புகளில் ஏற்படும் வழியை நீக்கும். உங்கள் ஆடைக்கும் காம்புகளும் நடுவே முட்டு கட்டையாக இது விளங்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளில் வலியெடுக்கும் பெண்களுக்கு இது பெரிதும் உதவியாக விளங்கும்.

ஐஸ் பேட் பயன்படுத்துங்கள்

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் மென்மையாக இருந்தால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் அம்மாதிரியான நேரத்தில் ஐஸ் பேட் பயன்படுத்தினால் சற்று நிம்மதியாக இருக்கும். இதனால் காம்புகளில் ஏற்படும் வலி நீங்கி உங்களை ஆசுவாசப்படுத்தும். கர்ப்பமாக காலத்தில், மார்பக காம்புகளை பராமரிக்கும் போது இதையும் பின்பற்றுங்கள்.

மார்பக பேட்

மார்பக காம்புகளில் நீர்மம் ஒழுக ஆரம்பித்தால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். இம்மாதிரி நேரத்தில் தரமுள்ள மார்பக பேட்களை பயன்படுத்துங்கள். தொற்றுக்களை தவிர்க்க மார்பக காம்புகளை ஈரமில்லாமல் சுத்தமாக வைத்திடுங்கள். மார்பக காம்புகளை பராமரிக்கும் போது இதையும் மறந்து விடாதீர்கள்.

English summary

Tips For Nipple Care During Pregnancy

Nipple care during pregnancy is very important to keep yourself comfortable. There is no need to get worried about thinking how to do nipple care while pregnant. Here are some ideas that you can try for nipple care during pregnancy.
Desktop Bottom Promotion