For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத மசாலா பொருட்கள்!!!

By Maha
|

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, கார உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் சமீபத்திய ரிப்போர்ட் ஒன்றில், கர்ப்பிணிகள் கார உணவுகளை உட்கொண்டால், மலச்சிக்கல் மற்றும் உள்காயங்கள் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று சொல்கிறது.

அதுமட்டுமல்லாமல் நிபுணர்களின் கருத்துப்படி, கர்ப்பிணிகள் மசாலா பொருட்களை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அது தாய்க்கும், வயிற்றில் வளரும் சிசுவிற்கும் நல்லது என்று சொல்வார்கள். ஆனால் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் ஒருசில மசாலா பொருட்கள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் கர்ப்ப காலத்தில் சரியான சரிவிகித உணவுகளை உட்கொண்டால் தான், குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். இங்கு கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய மசாலாப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்டை

பட்டை

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் பட்டையை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரைக் குடித்து வந்தால், இரத்த அழுத்தமானது கட்டுப்பாட்டுடன் இருக்கும். இருப்பினும் இது மிகுந்த காரத்துடன் இருப்பதால், இதனை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சீரகம்

சீரகம்

கர்ப்பிணிகள் சீரகத்தை வறுத்து, அத்துடன் நீரை ஊற்றி கொதிக்க விட்டு, அதனை குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பமானது குறைந்துவிடும். மேலும் இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்த மசாலாப் பொருளாகும்.

வெள்ளை மிளகு

வெள்ளை மிளகு

கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க வெள்ளை மிளகுத் தூளை உணவில் சேர்த்து வர குணமாகும்.

கருப்பு மிளகு

கருப்பு மிளகு

கர்ப்பிணிகளுக்கு உண்ணும் உணவானது சரியாக செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல் ஏற்பட ஆரம்பிக்கும். அப்படி நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, அதனை சரிசெய்ய கருப்பு மிளகுத் தூளை உணவில் சேர்த்து வர வேண்டும்.

ஏலக்காய்

ஏலக்காய்

இரத்த சோகை உள்ள கர்ப்பிணிகள் ஏலக்காய் பொடியை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அது பசியுணர்வை அதிகரித்து நன்கு சாப்பிட வழிவகுக்கும். மேலும் இது இரத்தம் கட்டியாவதைத் தடுக்கும்.

சோம்பு (fennel seeds)

சோம்பு (fennel seeds)

கர்ப்பிணிகள் சோம்பை வறுத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, பாதியாக சுண்ட வைத்து, அந்த நீரை குடித்தால், வயிற்றில் உள்ள புண் குணமாகிவிடும்.

பெருங்காயத் தூள்

பெருங்காயத் தூள்

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் பெருங்காயத் தூள். ஏனெனில் இது வயிற்றில் கடுப்பை ஏற்படுத்தி, கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.

கேப்பர்ஸ் (Capers)

கேப்பர்ஸ் (Capers)

இதுவும் உணவில் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் ஒரு மசாலா பொருள் தான். இந்த பொருளை கர்ப்பிணிகள் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரத்தப்போக்கை தூண்டிவிடும்.

அதிமதுரம்

அதிமதுரம்

அதிமதுரத்தை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிமதுரத்தில் உள்ள ஒரு பொருளானது கருப்பைக்குள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை நுழையச் செய்து, குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Spices To Eat & Avoid During Pregnancy

During pregnancy, there are some spices that must be avoided, while some are safe for the mother to consume. Take a look at some of the spices to eat and avoid during pregnancy.
Story first published: Thursday, April 3, 2014, 12:57 [IST]
Desktop Bottom Promotion