For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாக வைட்டமின்களை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்!!!

By SATEESH KUMAR S
|

தாய்மை பெண்கள் வாழ்வில் மிகவும் அற்புதமான ஒன்றாகும். கர்ப்ப காலத்தில் அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து காண்போம். கர்ப்பக் காலத்தில் உள்ள ஒரு பெண், உறுதியான வளர்ச்சியுடைய, ஆரோக்கியமான குழந்தையைப் பெற ஊட்டச்சத்துகள் நிறைந்த சிறந்த உணவு மிகவும் அவசியமாகும். கர்ப்பிணி பெண்ணுக்கு தேவையான இந்த வைட்டமின்கள் பழங்கள், தானியங்கள், பருப்புகள், மற்றும் கூடுதல் போஷாக்கு வழங்கக்கூடிய உணவு வகைகளில் தாராளமாகவே கிடைக்கின்றன.

கர்ப்ப காலத்தில் நம் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின் அளவு குறித்து நாம் அறிந்திருப்பது அவசியம் என்பதை நாம் நம் நினைவில் வைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின் அளவை விட அதிக வைட்டமின்களை எடுத்துக் கொள்ளும் போது தீவிரமான பிரச்சனைகள் தோன்றுகின்றன.

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

இந்த கட்டுரையில் "பெண்களுக்கான சரியான அளவு வைட்டமின்கள்" என்பதை "கர்ப்பிணிகளுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள்" என்று குறித்துள்ளோம். கர்ப்பிணிகள் தங்களுக்கு தேவையான வைட்டமின்களை காய்கறிகள்,பழங்கள், போன்ற இயற்கை உணவின் மூலம் உட்கொள்ளும்போது நாம் எவ்வித அச்சமும் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் அவை கர்ப்பிணிகளையும் கர்ப்பத்தில் உள்ள குழந்தையையும் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாக்குவதில்லை.

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பற்றிய கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

மாறாக நாம் கூடுதல் வைட்டமின்களை வைட்டமின் மாத்திரைகள், பொடிகள் ஆகியவற்றின் மூலமாக நமது உடலுக்கு வைட்டமின் தேவையை பூர்த்தி செய்ய முயலும் போது, அவற்றை உட்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏனெனில் தேவையை விட அதிக வைட்டமின்களை மாத்திரை வடிவிலோ அல்லது பொடி வடிவிலோ எடுத்து கொள்ளும் போது, அவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பிணிக்கும், அவளது குழந்தைக்கும் அதிக உபத்திரவத்தை உண்டாக்கும். அளவுக்கு அதிகமான வைட்டமின்களை உட்கொள்ளும் போது உண்டாகும் பக்கவிளைவுகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ

உடலில் வைட்டமின் ஏ அதிகமாகும் போது, மிகவும் தீவிர நோய்களான பிறப்பு குறைபாடு மற்றும் கல்லீரல் நச்சு தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தலாம். எனவே கூடுதல் வைட்டமின் ஏ சத்தைப் பெறும் முன் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

ஃபோலிக் அமிலம்

ஃபோலிக் அமிலம்

ஃபோலிக் அமிலம் அதிகமாகும் போது வயிற்றுப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, சொரி, தூக்கமின்மை, எரிச்சல், குமட்டல், வயிறு ஒவ்வாமை நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள், தோலில் ஒவ்வாமை, வலிப்பு வாயு பிடிப்பு, அதிக கோபத்தால் ஏற்படும் கிளர்ச்சி மற்றும் பல பக்கவிளைவுகள் தோன்றும். நீண்ட கால அளவில் ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொண்டால், அது இதயத்தில் பிரச்சனை உள்ளவரை மாரடைப்புக்கு கொண்டுச் செல்லும் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் தாக்கும் அபாயத்தினை அதிக அளவில் உண்டாக்கும்.

வைட்டமின் பி1

வைட்டமின் பி1

வைட்டமின் பி1 அதிகமாகும் போது, தோலில் சொறி, ஒவ்வாமை, தூக்கமின்மை, அமைதியற்ற தன்மை, இதய படபடப்பு, நீல நிற உதடுகள், நெஞ்சுவலி, மூச்சுகுறைபாடு, இருமலின் போதும், வாந்தியின் போதும், இரத்தம் வெளிப்படுத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வைட்டமின் பி1 அதிகமாக உட்கொள்ளும் போது, இதயம் மற்றும் மூளையின் மீது அது எதிர் மறையான விளைவை தோற்றுவிக்கும். நீண்ட கால அளவாக வைட்டமின் பி1 எடுத்துக் கொள்ளும் போது, உயர் இரத்த அழுத்தம், படபடப்பு போன்ற நோய்களும் ஏற்படுகின்றன.

வைட்டமின் பி6

வைட்டமின் பி6

அளவுக்கு அதிகமாக வைட்டமின் பி6 எடுத்துக் கொள்ளும் போது, உணர்வின்மை, பேறுகாலத்தில் வலிப்பு, நரம்பு சேதம், அதிக சூரிய ஒளி உணர்திறன், நெஞ்சசெரிச்சலுடன் வலி, சருமத்தில் திட்டுக்கள், குமட்டல் போன்றவை ஏற்படுகின்றன.

வைட்டமின் பி12

வைட்டமின் பி12

நீண்ட கால பயன்பாடாக வைட்டமின் பி12 அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, அது மிகவும் தீவிரமான பக்கவிளைவான புற்றுநோய் உண்டாகும் அபாயத்தினை அதிகமாக்கும். வைட்டமின் பி12 உயிரணு செல் பகுப்பு முறையை தூண்டுகிறது. ஆனாலும் உபயோகமான உயிரணுக்களையும், தீங்கு விளைவிக்க கூடிய உயிரணுக்களையும் பிரித்தறியும் ஆற்றல் அற்றதாக உள்ளதால், புற்றுநோய் செல்களின் பெருக்கத்திற்கு கூட வழி செய்யும் அபாயம் உள்ளது. உடல் பாகங்களில் அரிப்பு, ஒழுங்கற்ற இதய செயல்பாடு, மயக்கம், வழக்கமான தலைவலி ஆகியவை வைட்டமின் பி12 கூடுதலால் ஏற்படுகின்ற அறிகுறிகளாகும். கடுமையான இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்கள் வைட்டமின்பி12 அதிகம் எடுக்கும் போது, அது லுக்கேமியா நோய்க்கு கொண்டு செல்லும். எனவே வைட்டமின் பி12 கூடுதல் உணவாக எடுக்கும் முன் மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது அவசியம். தேசிய சுகாதார நிறுவனங்களின் கருத்துப்படி அதிகமான வைட்டமின் பி12 பார்வை நரம்பு சேதம் ஏற்படுத்தும் என்பதால், கர்ப்பத்துடன் இந்நோய் உள்ளவர்கள் அதை தவிர்ப்பது நல்லது. அளவுக்கதிகமான வைட்டமின் பி12 கணைய புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தினை அதிகரிக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வைட்டமின் சி

வைட்டமின் சி

ஆராய்ச்சிகளின் படி அளவுக்கு அதிகமான வைட்டமின் சி சிறுநீரக கல் தோன்றும் ஆபத்தினை அதிகரிக்கும். நமது உடல் வைட்டமின் சி சத்தை ஆக்சலேட்டாக மாற்றும். பெரும்பாலும் நமது உடலில் உள்ள ஆக்சலேட் சிறுநீர் மூலமே வெளியேறுகிறது. ஆனால் ஆக்சலேட்டின் அளவு அதிகரிக்கும் போது அது சிறுநீராக முழுவதும் வெளியேற முடியாது. எஞ்சியுள்ள ஆக்சலேட் படிவமாக நமது உடலில் தங்கிவிடுவதை சிறுநீரகக் கல் என்கிறோம்.

வைட்டமின் டி

வைட்டமின் டி

அளவுக்கு அதிகமான வைட்டமின் டி நமது உடலில் இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை அதிகரிக்கும். இரத்தத்தில் கால்சியத்தின் அளவு அதிகரிக்கும் போது, மோசமான அளவு பசியின்மை, குமட்டல், வாந்தி போன்றவை அறிக்குறிகளாக தோன்றும். கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாகும் போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். அதிகமான அளவு வைட்டமின் டி அல்லது அதை உட்கொள்வதால் ஏற்படும் நச்சுத்தன்மை, நமது உடலுக்கு பலவீனம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான வைட்டமின் டி எடுத்து கொள்வது, நிரந்தர சிறுநீரக செயலிழப்புக்கு வழிகோலும். மேலும் இது இதயத்திற்கு இரத்த ஓட்ட குறைபாடு, வறட்சி, இரத்தத்தில் ஒழுங்கற்ற உப்பின் அளவு (எலெக்ட்ரோலைட்) ஆகியவற்றை ஏற்படுத்தி மரணத்தை தருவிக்கும். எனவே வைட்டமின் டி எடுத்து கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது மிக அவசியமாகும்.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ அதிகமானால், அது பேறுகாலம் வரை கர்ப்பிணிக்கும், அவரது குழந்தைக்கும், தீவிர சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆகவே மருத்துவரின் அறிவுரை பெற்ற பின்னரே வைட்டமின் ஈ எடுத்துக் கொள்ள வேண்டும்.

"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" எனவே கர்ப்பிணிகள் எந்த கூடுதல் வைட்டமின்களை எடுக்கும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது சாலச் சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects Of Vitamin Overdose During Pregnancy

If you are taking any vitamin supplement like vitamin pills, powder etc to fulfill your body need then you need to concern with doctors first because Vitamin overdose can be very harmful for pregnant woman and for her baby also. In this article we are going to describe about side effects of Vitamin overdose.
Desktop Bottom Promotion