For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குண்டாக இருக்கும் பெண்கள் கருத்தரித்தால் பின்பற்ற வேண்டியவைகள்!!!

By Maha
|

பெரும்பாலும் குண்டாக இருக்கும் போது கருத்தரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஒருவேளை அப்படி கருத்தரித்துவிட்டால், சிலருக்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம் மற்றும் பிறப்புக் குறைபாடு போன்றவை ஏற்படும். ஆகவே தான் மருத்துவர்கள் கர்ப்பமாவதற்கு முன்பு எடை அதிகம் இருந்தால், முதலில் உடல் எடையை குறைத்துவிட்டு, பின் கருத்தரிக்க முயற்சிக்க சொல்கிறார்கள்.

மேலும் உலகில் 15-20 சதவீத பெண்களின் பி.எம்.ஐ-யை பார்த்தால், 30-திற்கு மேல் உள்ளது. இவ்வளவு இருந்தால், அத்தகையவர்கள் மிகவும் கவனமாக இருக்கும். குறிப்பாக கருத்தரித்துவிட்டால், அக்காலத்தில் ஒருசிலவற்றை பின்பற்றினால் தான், நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்.

இங்கு குண்டாக இருக்கும் போது கருத்தரித்த பெண்கள் பின்பற்ற வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடையை அதிகரிக்க வேண்டாம்

எடையை அதிகரிக்க வேண்டாம்

குண்டாக இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உடல் எடை இன்னும் அதிகரிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.

சுறுசுறுப்புடன் இருக்க முயற்சிக்கவும்

சுறுசுறுப்புடன் இருக்க முயற்சிக்கவும்

குண்டாக இருக்கும் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்புடன் இருப்பதன் மூலம் ஆரோக்கியமான பிரசவத்தைக் காணலாம். அதற்கு ஒருசில செயல்கள் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்ற வேண்டும்.

ஆரோக்கியமான உணவை உண்ணவும்

ஆரோக்கியமான உணவை உண்ணவும்

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். குறிப்பாக கால்சியம், புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்புக்களை தினசரி உணவில் சேர்த்து வர வேண்டும்.

ஆசையூட்டும் உணவுப் பொருட்களை தவிர்க்கவும்

ஆசையூட்டும் உணவுப் பொருட்களை தவிர்க்கவும்

கர்ப்ப காலத்தில் நிறைய உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். மேலும் அவை அனைத்தையும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இருப்பினும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், மனதில் அத்தகைய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துக் கொள்ளுங்கள்.

புரோட்டீன் அதிகம் உட்கொள்ளவும்

புரோட்டீன் அதிகம் உட்கொள்ளவும்

குண்டாக இருக்கும் கர்ப்பிணிகள் புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் எனர்ஜியானது அதிகரித்து, நல்ல மனநிலையைக் கொடுக்கும்.

கொழுப்புள்ள உணவுகளை மறக்கவும்

கொழுப்புள்ள உணவுகளை மறக்கவும்

முக்கியமாக கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை மறந்துவிட வேண்டும். இதனால் உடலில் கொழுப்புக்கள் சேர்வதை குறைப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

பசியை கட்டுப்படுத்த தண்ணீர் மிகவும் சிறந்தது. அதிலும் குண்டாக இருக்கும் பெண்கள் எடை அதிகரிக்கக் கூடாது என்று நினைத்தால், ஒரு பௌல் ஸ்நாக்ஸ் உடன் தண்ணீரை அதிகம் குடிப்பதன் மூலம் தடுக்கலாம்.

உடற்பயிற்சி செய்யவும்

உடற்பயிற்சி செய்யவும்

கர்ப்பிணிகள் தங்கள் எடை அதிகரிக்காமல் இருக்க, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். முக்கியமாக யோகாவை கர்ப்பிணிகள் மேற்கொள்வது நல்லது.

டயட்டை மேற்கொள்ள வேண்டாம்

டயட்டை மேற்கொள்ள வேண்டாம்

குண்டாக இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க டயட்டை மேற்கொள்ளக் கூடாது. இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pregnant When Obese: Tips To Follow

The best way to protect your health and your growing baby's well-being is to lose weight before you become pregnant. However, if this is not possible and if you are already pregnant, then there are some tips to follow if you are pregnant when obese. Take a look:
Story first published: Monday, May 5, 2014, 15:15 [IST]
Desktop Bottom Promotion