For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருக்கும் போது உணவில் நல்லெண்ணெயை சேர்த்துக் கொள்வது நல்லதா?

By Maha
|

பெண்களுக்கு கர்ப்ப காலம் ஒரு மிகச்சிறந்த அனுபவம். இக்காலத்தில் பெண்கள் தங்களது உடல்நலத்தை மட்டுமின்றி, வயிற்றில் வளரும் குழந்தையின் உடல்நலத்திற்கு ஏற்றவாறு உணவுகள் மற்றும் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் கர்ப்பிணிகள் நன்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொண்டால் தான், அது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

அந்த வகையில் நல்லெண்ணெயில் சத்துக்களான இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இருப்பினும் இது கருச்சிதைவு மற்றும் இதர பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், அலர்ஜி மற்றும் குறைப்பிரசவம் நடக்கும் வாய்ப்புள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். ஆனால் மலச்சிக்கல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

சரி, இப்போது நல்லெண்ணெய் கர்ப்பிணிகளுக்கு நல்லதா கெட்டதா? என்று கேட்கலாம். இது அனைத்தும் ஒவ்வொரு கர்ப்பிணிகளின் உடல்நலத்தைப் பொறுத்தும், எடுத்துக் கொள்ளும் அளவைப் பொறுத்தும் மாறுபடும். இருப்பினும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயின் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல் எடுத்துக் கொள்ள வேண்டாம். அதுமட்டுமல்லாமல், நல்லெண்ணெயை உணவில் சேர்க்கும் முன், மருத்துவரிடம் கேட்டு பின்னர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது நல்லெண்ணெயை கர்ப்பிணிகள் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருச்சிதைவு

கருச்சிதைவு

இந்தியாவின் சில பகுதிகளில் கருவைக் கலைப்பதற்கு நல்லெண்ணெயில் வெல்லம் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆகவே உங்கள் பாட்டியிடம் சென்று நல்லெண்ணெய் சாப்பிடலாமா என்று கேட்டால், அவர்கள் நிச்சயம் வேண்டாம் என்று தான் சொல்வார்கள்.

அலர்ஜி

அலர்ஜி

நல்லெண்ணெயில் சல்பர் மற்றும் பாலி அன் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே அலர்ஜி உள்ளவர்கள், நல்லெண்ணெயை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது.

சூட்டை தூண்டும் உணவுப் பொருள்

சூட்டை தூண்டும் உணவுப் பொருள்

ஆயுர்வேத மருத்துவத்தின் படி, நல்லெண்ணெய் உடலின் வெப்பத்தை தூண்டும் உணவுப் பொருட்களில் ஒன்று. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், உடலின் வெப்பமானது தூண்டப்பட்டு, வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

ஹார்மோன் தூண்டுதல்

ஹார்மோன் தூண்டுதல்

நல்லெண்ணெயானது உடலின் ஹார்மோனை தூண்டும் திறன் கொண்டவை. ஆகவே கர்ப்பிணிகள் நல்லெண்ணெயை உணவில் சேர்த்தால், கருப்பையானது சுருங்கப்பட்டு, குறைப்பிரசவத்தையோ அல்லது கருச்சிதைவையோ ஏற்படுத்தும். எனவே தான் பலர் நல்லெண்ணெயை கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டாம் என்று சொல்கின்றனர்.

இரத்தப்போக்கு

இரத்தப்போக்கு

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கை நிறுத்தவும் உதவியாக இருக்கும். எனவே நல்லெண்ணெயை அளவாக பயன்படுத்தி வந்தால், கர்ப்ப காலத்தில் நல்லது என்று சிலர் சொல்கின்றனர்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

கர்ப்பிணிகள் சிலர் மலச்சிக்கலுக்கு ஆளாவார்கள். அத்தகையவர்கள் நல்லெண்ணெயை உணவில் சேர்த்தால், அதில் உள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை தடுக்கும். எனவே நல்லெண்ணெய் நல்லதாகவும் கருதப்படுகிறது.

 பதட்டத்தைக் குறைக்கும்

பதட்டத்தைக் குறைக்கும்

பெரும்பாலான சமயங்களில் நல்லெண்ணெயானது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பதட்டத்தைக் குறைக்கும். ஏனெனில் இதில் நியாசின் என்னும் மன பதட்டத்தைக் குறைக்கும் பொருள் உள்ளது.

சைவ கர்ப்பிணிகளுக்கு நல்லது

சைவ கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்பிணிகளில் சைவ உணவை மட்டும் உண்பவர்கள், இதனை உணவில் அளவாக சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும் என்று சொல்கின்றனர். குறிப்பாக பால் மற்றும் நட்ஸ் சாப்பிட முடியாதவர்கள், இதனை அளவாக உட்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Sesame Oil Good During Pregnancy?

Is sesame oil good or bad for pregnancy? The effect of sesame oil on pregnant women depends on the health status of the pregnant woman and the quantity consumed. Read on to know if sesame oil is safe when pregnant. We discuss the pros and cons of sesame oil for pregnancy.
Story first published: Monday, January 27, 2014, 16:20 [IST]
Desktop Bottom Promotion