For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகள் பாஸ்தா சாப்பிடுவது நல்லதா.. கெட்டதா..?

By Maha
|

சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் கொண்டு செய்யப்படும் இத்தாலிய உணவுகளில் ஒன்று தான் பாஸ்தா. தற்போது இந்த பாஸ்தா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இதனை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் பாஸ்தாக்களை மற்றும் தக்காளி சாஸ் சேர்த்த சமைத்து சாப்பிட்டால், அது வயிற்றை நிரப்பிவிடும்.

ஆனால் இந்த பாஸ்தாக்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதா நல்லதா என்ற கேள்வி அனைவரது மனதிலும் நிச்சயம் இருக்கும். பாஸ்தாக்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் பாஸ்தாக்களில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, பி மற்றும் போலிக் ஆசிட் போன்றவை நல்ல அளவில் உள்ளன. இருப்பினும் கடைகளில் விற்கப்படும் பாஸ்தாக்கள் ஆரோக்கியமற்றது. மாறாக வீட்டில் தயாரிக்கப்படும் பாஸ்தாக்களை சாப்பிடுவது நல்லது.

கர்ப்பமாக இருக்கும் போது உணவில் நல்லெண்ணெயை சேர்த்துக் கொள்வது நல்லதா?

மேலும் பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருப்பதால், உண்ணும் உணவுகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்காக பாஸ்தா கெட்டதா என்று கேட்கலாம். ஆனால் அதற்கான சரியான விடை, எந்த பாஸ்தாவை சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் மற்றும் எத்தனை முறை சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து தான் சொல்ல முடியும்.

பாஸ்தாவில் கர்ப்பிணிகளுக்கு தேவையான நிறைய சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், அளவாக உட்கொண்டால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் அதிகமாக சாப்பிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இப்போது கர்ப்பிணிகள் பாஸ்தாவை சாப்பிடுவது நல்லதா என்று மேலும் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, February 4, 2014, 17:14 [IST]
Desktop Bottom Promotion