For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவ வலியை தூண்டுதல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!

By Ashok CR
|

குழந்தை பிறப்பதற்காக பெண்களுக்கு ஏற்படும் இறுக்கத்தின் போது, பிரசவ வலி என்ற இயற்கையான செயல்முறை தொடங்கும். இன்றைய கால கட்டத்தில் இந்த வலியை தூண்டி விடவும் வழிமுறைகள் வந்துவிட்டன. அதனை பற்றி உங்கள் மனதில் பல கேள்விகள் எழலாம். உதாரணத்திற்கு, இப்படி பிரசவ வலியை தூண்டி விடுவதால், பக்க விளைவுகள் உண்டாகுமா என்ற சந்தேகம் எழலாம். அதே போல் எந்த சூழ்நிலையில் இப்படி பிரசவ வலியை தூண்டி விட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளவும் நீங்கள் விரும்புவீர்கள்.

பிரசவ வலியை இயற்கை வழிமுறைகள் அல்லது ரசாயன வழிமுறைகளை பயன்படுத்தி தூண்டி விடலாம். ஆனால் தூண்டுதல் என்று நாம் சொல்லும் போது, அது ரசாயன வழிமுறையையே குறிக்கும். இன்றைய கால கட்டத்தில் ரசாயன முறைப்படி தூண்டிவிடும் பிரசவ வலி தான் அதிகமாக பின்பற்றப்படுகிறது. ஆனாலும் சில நேரங்களில், சிசேரியனை தவிர்த்து சுகப்பிரசவமாக இதனை கடைசி ஆயுதமாக எடுக்கின்றனர்.

நரம்பூடாக மருந்தை ஊசி வழியாக ஏற்றி தான் இந்த பிரசவ வலியை பொதுவாக தூண்டி விடுவார்கள். உங்களுக்கு ஏதேனும் அலர்ஜிகள் இருந்தால், பிரசவ வலியை தூண்டிவிடும் போது, சில பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் விஷயத்தில் பிரசவ வலியை தூண்டி விடுவதே சிறந்த முடிவு என உங்கள் மருத்துவர் ஏன் நினைக்கிறார் என்ற காரணத்தை அவர் தான் விளக்க வேண்டும். இருப்பினும் தூண்டிவிடப்பட்ட பிரசவ வலி அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் பிரசவ வலி தூண்டி விடப்படுவதால், மயக்க மருந்து கொடுக்கப்படாமல் இருக்காது.

பிரசவ வலி தூண்டுதலுக்கு முன்னதாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவைகளைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாள் கடந்து விட்டதா?

நாள் கடந்து விட்டதா?

கர்ப்பமாகி 40 அல்லது 42 வாரங்களை கடந்துவிட்டீர்களா? அப்படியானால் உங்கள் குழந்தை பனிக்குடப்பையில் மலம் கழிப்பதற்கு முன்பாக, உங்கள் மருத்துவர் உங்களுக்கு பிரசவ வழியை தூண்டி விட நினைப்பார்.

பிரசவத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை

பிரசவத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை

நீங்கள் பிரசவ அறையில் 12 மணி நேரத்திற்கு மேலாக இருந்து, 2-3 செ.மீ. மேல் விரிவடையவில்லை என்றால், உங்களுக்கு இறுக்கம் ஏற்பட்டும் கூட உங்கள் கர்ப்பவாய் திறக்கவில்லை என்று அர்த்தமாகும். அப்படியானால் உங்களுக்கு கண்டிப்பாக உதவி தேவை.

கீழிறங்கிய பனிக்குடம்

கீழிறங்கிய பனிக்குடம்

சில நேரங்களில், கீழிறங்கிய பனிக்குடத்தால், குழந்தையை 38 வாரங்களுக்கு மேல் சுமப்பது ஆபத்தாகிவிடும். இந்த நேரத்தில், பிரசவ வலியை தூண்டி விடுவது ஒரு வழியாக அமையும்.

பனிக்குடம் உடைந்து விட்டதா?

பனிக்குடம் உடைந்து விட்டதா?

பனிக்குடம் உடைந்த சில மணி நேரத்திற்குள்ளேயே, நீங்கள் குழந்தையை பிரசவிக்க வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில், பிரசவ வலி தூண்டி விடப்படும்.

உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது இரத்தக் கொதிப்பு உள்ளதா?

உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது இரத்தக் கொதிப்பு உள்ளதா?

மேற்கூறிய நோய்கள் ஏதேனும் இருந்தால், உங்கள் பிரசவம் சிக்கலாகலாம். அதனால் 38 வாரங்களுக்கு மேல் நீங்கள் குழந்தையை சுமப்பதை மருத்துவர்கள் விரும்ப மாட்டார்கள்.

உங்களுக்கு தொற்று ஏதேனும் உள்ளதா?

உங்களுக்கு தொற்று ஏதேனும் உள்ளதா?

உங்களுக்கு ஏதேனும் தொற்று இருந்தால், நீங்கள் சீக்கிரமாகவே குழந்தையை பெற்றெடுக்க வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தில் சிசேரியன் செய்வதற்கு பதிலாக பிரசவ வலியை தூண்டிவிடும் வழிமுறையை கையாளலாம்.

எந்த பிரசவ வலி தூண்டுதல் வழிமுறை உபயோக்கிக்கப்படும்?

எந்த பிரசவ வலி தூண்டுதல் வழிமுறை உபயோக்கிக்கப்படும்?

ஹார்மோன் ப்ரோஸ்ட்க்லாண்டினை பெண்ணுறுப்பு வழியாக கொடுப்பதே பாதுக்காப்பான முறையில் பிரசவ வலியை தூண்டிவிடும் முறையாகும். இருப்பினும் உட்புற பரிசோதனைகள் தேவைப்படலாம். ஆனால் செயற்கையாக பனிக்குடத்தை உடைப்பது இனியும் அனுமதிக்கப்பட மாட்டாது.

வலி நிவாரணி

வலி நிவாரணி

இயற்கையான பிரசவ வலியுடன் ஒப்பிடுகையில் தூண்டி விடப்படும் பிரசவ வலி ஒன்றும் மோசமில்லை. இயற்கை வலியை போல் அது திடீரென ஒருங்கிணைந்து வராது. இருப்பினும் வலிக்கு நிவாரணியாக, வலி மதமதப்பு மருந்தை பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Induced Labour Pain: Facts To Know

Labour pain can be induced by natural methods or chemical ones. The chemically induced labour pain procedure is being actively used these days. But sometimes, it is the last resort to ensure a natural vaginal birth and thus avoid c-section delivery. Here are some facts about induced labour pain that you need to be aware of before you go for it:
Story first published: Tuesday, May 6, 2014, 11:33 [IST]
Desktop Bottom Promotion