For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டாம் முறையாக கர்ப்பமடைந்த விஷயத்தை முதல் குழந்தையிடம் எவ்வாறு பகிர வேண்டும்?

By Nithya Devi Muthuraman
|

இரண்டாவதாக ஒரு குழந்தையை இவ்வுலகிற்கு கொண்டு வரும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் முக்கியமாக தெரிந்து வேண்டிய விஷயங்கள் பல உள்ளன! கர்ப்பமடைந்திருக்கும் விஷயத்தை பகிர்ந்து கொள்வதற்கு உகந்த சமயம் எது? இந்த புது நபரின் வருகை குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களிடம் என்ன வகையான பாதிப்பை உண்டாக்கக்கூடும்? இந்த புதிய வரவு மூத்த குழந்தையை எவ்வாறு பாதிக்கக்கூடும்? என்பது போன்ற நிதர்சனமான மற்றும் நியாயமான கேள்விகள் இரண்டாவது பிரசவத்துக்கு தயாராகும் தாயின் மனதில் தோன்றி அசூயை உண்டாக்கக்கூடும்.

முதல் குழந்தையிடம் அதற்கு தம்பி அல்லது தங்கை பிறக்கவிருக்கும் விஷயத்தை உணர்வுப்பூர்வமாகவும், அதற்கு புரியும் விதத்திலும் எடுத்துச் சொல்ல வேண்டியது, இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொரு தாயின் முக்கிய கடமையாகும். இரண்டாவது குழந்தை வந்த பின் தன் பெற்றோரின் மனதில் தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடம் பறிபோய்விடுமோ என்றும், குடும்பத்தில் அதன் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்றும், பல்வேறு அச்சங்கள் முதல் குழந்தையின் மனதில் தோன்றுவது இயல்பே. முதல் குழந்தைக்கென முன்பு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கணிசமான பகுதி, புதிதாக குழந்தை பிறந்த பின் அதனை பராமரிப்பதில் செலவிடப்படுவதால் முதல் குழந்தை தான் தனிமையில் விடப்பட்டு விட்டதாக உணரும்.

இது போன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு உங்கள் முதல் குழந்தையை தயார் செய்வது நல்லது. அவ்வாறு தயார் செய்வதன் மூலம், பிற்பாடு அதற்கு மனவருத்தத்தை உண்டாக்கக்கூடிய சூழல்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். குழந்தை பிறந்த பின் உங்கள் வீட்டில் நிலவக்கூடிய சூழலைப் பற்றி முதல் குழந்தையிடம் விளக்கிக் கூறுங்கள். இவ்வாறானதொரு சூழலை எவ்வாறு கையாள வேண்டும் என்று திக்குத்திசை தெரியாமல் தவிப்பவர்களுக்கெனவே சில குறிப்புகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

இரண்டாம் குழந்தையை எதிர்பார்த்திருக்கும் தாய்மார்கள் மேற்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

* தளிர் நடையிடும் உங்கள் மூத்தக் குழந்தையை, புதிதாக பிறந்திருக்கும் தன் உடன்பிறப்பை கையில் தூக்கி, முத்தமிடுவதற்கு அனுமதியுங்கள். இதன் மூலம் அவர்களிடையே ஒரு வித பிடிப்பு ஏற்படும்.

* உங்கள் மூத்த குழந்தைக்கென பிரத்யேகமாக நேரத்தை ஒதுக்குங்கள். இரண்டாவது குழந்தை அயர்ந்து உறங்கும் நேரத்தில், உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஓய்வு நேரத்தின் பெரும்பகுதியை உங்கள் முதல் குழந்தையுடன் செலவிடப் பாருங்கள்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

* உங்கள் இரண்டாவது குழந்தையுடன் வீட்டிற்கு வந்த பின் எத்தருணத்திலும் உங்கள் முதல் குழந்தையை நிராகரிப்பது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

* மூத்த குழந்தையிடமிருந்து புதிதாக பிறந்த குழந்தையை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று அதீத அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்ளாதீர்கள்.

சில முக்கிய ஆலோசனைகள்

சில முக்கிய ஆலோசனைகள்

* கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலிருந்தே உங்கள் கர்ப்பம் தொடர்பான அனைத்து செயல்பாடுகளிலும் முடிந்தவரை உங்கள் முதல் குழந்தையையும் ஈடுபடுத்துங்கள். குழந்தையிடம் அதற்கே அதற்கென ஒரு தங்கையோ அல்லது தம்பியோ உங்கள் வயிற்றில் வளர்ந்து வரும் செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சில முக்கிய ஆலோசனைகள்

சில முக்கிய ஆலோசனைகள்

* கர்ப்ப காலத்தின் போதான வழக்கமான பரிசோதனைக்கென மருத்துவரிடம் செல்லும் போதெல்லாம் உங்கள் முதல் குழந்தையையும் உங்களுடன் கூட்டிச் செல்லுங்கள். கருவிலிருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை முதல் குழந்தையை கேட்கச் செய்யுங்கள். உங்கள் மருத்துவர் கனிவானவராக இருப்பாரானால், கர்ப்ப காலத்தின் போது உங்கள் வயிற்றில் ஏற்படக்கூடிய மாற்றங்களை உங்கள் குழந்தைக்கு விளக்கிக் கூறுமாறு கேட்டுக் கொள்ளலாம்.

சில முக்கிய ஆலோசனைகள்

சில முக்கிய ஆலோசனைகள்

* பிறக்கவிருக்கும் குழந்தைக்கு, உங்கள் மூத்த குழந்தை, சில நேரங்களில் தாய் போலவும், தந்தை போலவும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதை எடுத்துக் கூறுங்கள். ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு, எவ்வாறு குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட வேண்டும் என்றும், குழந்தையின் ஈரத்துணிகளை மாற்றுவது எப்படி என்பதையும் செய்து காட்டுங்கள்.

சில முக்கிய ஆலோசனைகள்

சில முக்கிய ஆலோசனைகள்

* புதிதாக பிறக்கவிருக்கும் குழந்தையை பராமரிப்பதில், முடிந்த வரையில் உறுதுணையாக இருந்து உதவி புரியுமாறு உங்கள் மூத்த குழந்தையிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

சில முக்கிய ஆலோசனைகள்

சில முக்கிய ஆலோசனைகள்

* மருத்துவமனையில் நீங்கள் தங்கும் போது உங்களுக்கு தேவைப்படக்கூடிய பொருட்களை எடுத்து வைக்கும் போது உங்கள் முதல் குழந்தையையும் அதில் ஈடுபடுத்துங்கள். இரண்டாவது குழந்தை பிறந்த பின், அதனை உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அறிமுகப்படுத்தும் பணியை மூத்த குழந்தையிடம் ஒப்படையுங்கள். மேலும், முதல் குழந்தையிடம் புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கூறி அதனை உற்சாகப்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Share Your Second Pregnancy with Your First Child

Concerned about how the new addition will affect your first baby? Yes, these are some of the legitimate and obvious questions that cross mothers’ mind while preparing herself for another child of hers.
Story first published: Saturday, May 17, 2014, 17:03 [IST]
Desktop Bottom Promotion