For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

By Maha
|

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் தாய்மை அடைந்த பின்னரே நிறைவுறுகிறது. அந்த வகையில் கருத்தரிக்கும் போது பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் உண்ணும் உணவுகளில் இருந்து, மேற்கொள்ளும் பழக்கங்கள் வரை அனைத்திலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஏனெனில் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினால், கருத்தரிப்பதே கஷ்டமான ஒரு விஷயமாகிவிட்டது. எனவே கருத்தரித்த பின்னர் பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது வயிற்றில் வளரும் சிசுவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

இதுப்போன்று வேறு சில: கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!!!

குறிப்பாக கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். அப்போது அனுபவசாலிகளிடம் கர்ப்ப காலத்தில் எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் எந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்று கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடக்க வேண்டும்.

இங்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து அவற்றை தவிர்த்து, அழகான குழந்தையைப் பெற்றெடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளி மற்றும் அன்னாசி

பப்பாளி மற்றும் அன்னாசி

கர்ப்ப காலத்தில் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஆனால் ஒருசில பழங்களை தொடவே கூடாது. அதில் பப்பாளி மற்றும் அன்னாசி கருவிற்கு ஆபத்தை விளைவிக்கும் பழங்கள். எனவே இதனை அறவே தொடாதீர்கள்.

மீன்

மீன்

மீன்களில் அதிக அளவில் மெர்குரி இருப்பதால், அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. குறிப்பாக ஸ்வார்டுபிஷ், சுறா மற்றும் ராஜா கானாங்கெளுத்தி போன்றவைகளை சாப்பிடவே கூடாது. வேண்டுமானால் சால்மன் மீன் சாப்பிடலாம். ஆனால் அதுவும் மாதத்திற்கு ஒரு முறை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.

இறைச்சி

இறைச்சி

இறைச்சிகளை சாப்பிடும் போது பாதியாக வேக வைத்து சாப்பிடக்கூடாது. இதனால் இறைச்சியில் உள்ள கிருமியானது சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இறைச்சியை நன்கு மென்மையாக வேக வைத்து சாப்பிட வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தொடவே கூடாது.

பச்சை பால்

பச்சை பால்

பாலில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் பாலை அதிகம் குடிப்பார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் பாலை பச்சையாக குடிக்கக்கூடாது.

முட்டை

முட்டை

அனைவருக்குமே முட்டை பிடிக்கும். ஆனால் கர்ப்பிணிகள் முட்டையை பச்சையாகவோ அல்லது பாதியாக வேக வைத்ததையோ சாப்பிடாமல், நன்கு வேக வைத்த முட்டையை தான் சாப்பிட வேண்டும்.

சீஸ்

சீஸ்

அனைத்து சீஸ்களுமே ஆபத்தானவை அல்ல. ஆனால் ஒருசில சீஸ்களானது சுத்திகரிக்கப்படாத பச்சையான பால் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். அத்தகைய சீஸ்களை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால், சுத்திகரிக்கப்பட்ட பால் கொண்டு செய்யப்பட்ட சீஸை சாப்பிடலாம்.

பிரஷ் ஜூஸ்

பிரஷ் ஜூஸ்

பிரஷ் ஜூஸ் என்று கடைகளில் விற்கப்படும் ஜூஸ்களை வாங்கி குடிப்பதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சுத்தம் இருக்காது. வேண்டுமானால், வீட்டிலேயே செய்து குடிக்கலாம்.

ஈரல்

ஈரல்

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஈரல் எனப்படும் இறைச்சிகளின் கல்லீரல். ஏனெனில் இவற்றில் வைட்டமின் ஏ அளவுக்கு அதிகமாக இருப்பதால், இது சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

காப்ஃபைன் உள்ள பொருட்கள்

காப்ஃபைன் உள்ள பொருட்கள்

காப்ஃபைன் உள்ள பொருட்களை, கர்ப்பத்தின் ஆரம்பத்தில் தவிர்க்க வேண்டும். மேலும் கர்ப்ப காலம் முழுவதும் அளவாகத் தான் காப்ஃபைன் உள்ள பொருட்களான டீ, காபி, சாக்லெட், குளிர் பானங்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

எக்காரணம் கொண்டும் ஆல்கஹால் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் சுவைத்துக் கூட பார்த்துவிட வேண்டாம். இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, சில சமயங்களில் கருச்சிதைவையும் ஏற்படுத்திவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Avoid During Early Pregnancy

People tend to give you different and confusing advice related to your pregnancy diet. There are several foods to avoid during the first trimester, and your diet must ensure that the unborn child gets all the essential nutrients. Here is a list of foods to avoid during early pregnancy.
Desktop Bottom Promotion