For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பத்தின் மூன்றாம் பருவ காலத்தில் குமட்டல் ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

By Maha
|

கர்ப்ப காலத்தில் பெண்கள் பிரச்சனைகளை சந்திப்பது பொதுவானவையே. ஆனால் அப்படி சந்திக்கும் பிரச்சனைகளில் சில அவ்வப்போதோ அல்லது கர்ப்ப காலம் முழுவதுமோ இருக்கும். அப்படி கர்ப்பிணிகள் சந்திக்கும் பிரச்சனைகளில் சோர்வு மற்றும் குமட்டல் தான் கர்ப்ப காலம் முழுவதும் இருக்கக்கூடும்.

எவ்வளவு தான் சோர்வும், குமட்டலும் கர்ப்ப காலத்தில் சாதாரணமாக இருந்தாலும், அது ஆரம்ப காலத்தில் தான். அதுவே அளவுக்கு அதிகமானால் பிரச்சனை தான். ஆகவே கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் மூன்றாம் பருவ காலத்தில் குமட்டல் ஏற்படுவற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு அந்த காரணங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Causes Of Nausea In The Third Trimester

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

கர்ப்பத்தின் ஆரம்பத்தில் குமட்டல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு தான். இப்படி ஹார்மோன் ஏற்றத்தாழ்வானது கர்ப்ப காலம் முழுவதும் ஏற்படுவதால் தான் குமட்டலானது கர்ப்ப காலம் முழுவதும் சிலருக்கு நீடிக்கிறது.

வயிறு பெரிதாவது

குழந்தை வளர வளர வயிற்றின் அளவானது அதிகரித்து, அடிவயிற்றில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அப்படி வயிற்றில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் போது, இரைப்பையில் உள்ள ஆசிட்டானது மேலே ஏறி, நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டலை ஏற்படுத்துகிறது.

அதிகப்படியான உணவு

ஒரே வேளையில் கர்ப்பிணிகளால் உணவை அதிகம் உட்கொள்ள முடியாது. ஒருவேளை அப்படி உட்கொண்டால், அவை குமட்டலை ஏற்படுத்தும். இதற்கு காரணம், குழந்தையின் வளர்ச்சியினால், வயிற்றில் உணவை சேமிக்கும் இடத்தின் அளவு குறைவாக இருப்பதால், அதிகமாக உண்ணும் உணவுகள் வயிற்றை சென்றடையாமல், குமட்டலை ஏற்படுத்துகிறது. எனவே தான் கர்ப்பிணிகளை சிறிது சிறிதாக அவ்வப்போது உணவை உட்கொள்ள சொல்கின்றனர்.

கர்ப்பத்தின் மூன்றாம் பருவ காலத்தில் குமட்டல் வந்தால் என்ன செய்வது?

கர்ப்பத்தின் ஆரம்பத்தில் வருவது போன்றே குமட்டலானது கர்ப்பத்தின் மூன்றாம் பருவ காலத்தில் வருவது சாதாரணம் அல்ல. இருப்பினும் அதற்கு பயப்பட வேண்டாம். ஆனால் இந்த நிலையில் தவறாமல் மருத்துவரை சந்தித்து, உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் கர்ப்பத்தின் மூன்றாம் பருவ காலத்தில் திடீரென்று குமட்டல் வருவதற்கு சில வைரஸ்களும் காரணமாக இருக்கலாம். எனவே தவறாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் சிலரால் குமட்டலின் காரணமாக சரியாக சாப்பிட முடியாமல் போகும். இதனால் குழந்தைக்கும், தாய்க்கும் வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போகும். ஆகவே கர்ப்பிணிகள் தங்களது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

எனவே கர்ப்பிணிகள் உடலில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அதனை சாதாரணமாக எண்ணாமல், முறையாக கவனித்து வந்தால், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

English summary

Causes Of Nausea In The Third Trimester

Let’s look into some of the following causes that can get you nauseous even during your third trimester of pregnancy.
Story first published: Tuesday, March 11, 2014, 9:16 [IST]
Desktop Bottom Promotion