கர்ப்பிணிகளே! உங்கள் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?

By:
Subscribe to Boldsky

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தானா அல்லது பெண் குழந்தை தானா என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். ஆனால் நம் நாட்டில் வயிற்றில் வளரும் குழந்தை என்ன என்பதை ஸ்கேன் செய்து பார்க்க முடியாது. இதற்கு அக்காலத்தில் நம் முன்னோர்களின் செயல்கள் தான் காரணம். ஏனெனில் அக்காலத்தில் பெண் குழந்தை என்றால் அதனை கருவிலேயே கள்ளிப்பால் கொடுத்து கொன்றார்கள். இத்தகைய பெண் சிசுக் கொலைகளானது நடைபெற்றதால், நம் அரசு அதனைத் தடை செய்துள்ளது.

கர்ப்பிணிகளே! குழந்தை அழகா.. வெள்ளையா.. பிறக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க...

இருப்பினும் நம் பாட்டிமார்கள் இன்றளவும் ஒருசில அறிகுறிகளை வைத்து வயிற்றில் வளர்வது ஆணா அல்லது பெண்ணா என்று சரியாக சொல்லி வந்தனர். மேலும் பலருக்கும் அவர்கள் சொன்ன படியே குழந்தையும் பிறந்துள்ளது. தற்போது பலரும் தனிக்குடித்தனம் இருப்பதால், அவைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை நம் முன்னோர்கள் கணித்து வந்த அந்த அறிகுறிகளைக் கொடுத்துள்ளது. அந்த அறிகுறிகளைக் கொண்டு உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஏற்ற இறக்கம்

உங்கள் வயிறு இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே அதுவே மேலே ஏறி இருந்தால், அது பெண் குழந்தை.

கருப்பு கோடு

வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை. ஆனால் அந்த கோடானது தொப்புளுக்கு கீழே மறைந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையாம்.

பெண்டுலம் ட்ரிக்

உங்கள் மோதிரத்தை உங்கள் முடியில் கட்டி, வயிற்றிற்கு மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் வளர்வது ஆண், அதுவே பக்கவாட்டில் ஆடினால் பெண் என்று அர்த்தம்.

வயிற்றில் அசைவு

நம் முன்னோர் மற்றொரு முறை கொண்டும் கணித்தனர். அது என்னவென்றால் வயிற்றில் அசைவானது குறைவாக இருந்தால், ஆண் குழந்தை என்றும், அதுவே அசைவு அடிக்கடி அதிகம் இருந்தால், பெண் குழந்தை என்றும் சொல்வார்கள்.

கூடைப்பந்தா? தர்பூசணியா?

உங்கள் வயிறு கூடைப்பந்து போன்று வட்டமாக இருந்தால், வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது என்று அர்த்தம். அதுவே தர்பூசணி போல் நீள்வட்டமாக இருந்தால் பெண் குழந்தை என்று அர்த்தம்.

குழந்தையின் எடை

சுமக்கும் குழந்தையின் எடை வயிற்றின் முன்பக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்று அர்த்தம். குழந்தையானது வெயிட் இல்லாதது போல் இருந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்று அர்த்தம்.

புளிப்பா? இனிப்பா?

உங்களுக்கு புளிப்பான உணவின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், அது ஆண் குழந்தையை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம். அதுவே இனிப்பு அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தமாம்.

வாந்தி, மயக்கமா?

கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது சாதாரணம். ஆனால் இது அளவுக்கு அதிகமாக இருந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்றும், குறைவாக இருந்தால் பெண் குழந்தை என்றும் அர்த்தமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Belly Signs To Show Your Pregnant With A Boy

When you're pregnant, it can be tempting to try your luck on different methods of gender predictions.
Story first published: Thursday, November 20, 2014, 12:59 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter