For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் பருமனுடன் கருத்தரித்தால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

By Maha
|

பொதுவாக அதிகப்படியான உடல் எடையுடன் இருந்தால், சிலருக்கு கருத்தரிப்பதே பிரச்சனையாக இருக்கும். இருப்பினும் சிலர் கருத்தரிப்பார்கள். அப்படி ஒருவேளை கருத்தரித்துவிட்டால், பின் கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

ஆகவே கருத்தரிக்க நினைத்தால், முதலில் உடல் எடையை சரியாக வைத்துக் கொண்டு பின் முயல வேண்டும். மேலும் உடல் பருமனுடன் கருத்தரித்தால், ஓவுலேசன் தடைபடுவதோடு, ஐவிஎஃப் சிகிச்சையினால் கூட குழந்தையை பெற்றெடுக்க முடியாத நிலை ஏற்படும்.

கர்ப்பிணிகளே! குழந்தை அழகா.. வெள்ளையா.. பிறக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க...

எனவே கருத்தரிக்கும் முன்பே, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர மருத்துவருடன் கலந்தாலோசித்து, அவர் சொல்லியவற்றை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை பின்பிற்றி, உடல் எடையை குறைத்து கருத்தரித்தால், எந்த பிரச்சனையும் இல்லாமல் அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

ஆனால் உடல் பருமனுடன் கருத்தரித்துவிட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இக்காலத்தில் மருத்துவரை தவறாமல் சந்தித்து, அவர்கள் சொல்வதை செய்ய வேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயலக்கூடாது. இதனால் குழந்தைக்கும், தாய்க்கும் தான் ஆபத்து. இங்கு உடல் பருமன் உள்ளவர்கள் கருத்தரித்தால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பகால நீரிழிவு

கர்ப்பகால நீரிழிவு

பொதுவாக கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் கவனமாக இல்லாவிட்டால், கர்ப்பகால நீரிழிவிற்கு ஆளாக வாய்ப்புள்ளது. அதிலும் உடல் பருமனுடன் கருத்தரித்தால், கர்ப்பகால நீரிழிவானது எளிதில் வந்துவிடும்.

நோய்த்தொற்றுகள்

நோய்த்தொற்றுகள்

உடல் பருமனுடன் கருத்தரித்த பெண்களுக்கு சிறுநீரக பாதையில் அதிகம் நோய்த்தொற்றுகள் ஏற்படும். இப்படி சிறுநீரக பாதையில் அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால், சிசேரியன் முறையில் தான் பிரசவம் நடைபெறும்.

சுகப்பிரசவம் தடைபடும்

சுகப்பிரசவம் தடைபடும்

அதிகப்படியான உடல் எடை இருந்தால், அத்தகையவர்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறும் வாய்ப்பு குறையும். ஏனெனில் உடலில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை கருப்பையின் வாயை அடைத்துவிடும். எனவே அத்தகையவர்களுக்கு சிசேரியன் பிரசவம் தான் பெரும்பாலும் நடைபெறும்.

சிசேரியன் பிரச்சனை

சிசேரியன் பிரச்சனை

சில நேரங்களில் சிசேரியன் செய்வது கூட பிரச்சனையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சிசேரியன் செய்த பின்னர், தாய்க்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். எப்படியெனில் சிசேரியன் செய்யும் போது அதிகப்படியான கொழுப்பை வெட்டி குழந்தையை வெளியே எடுத்த பின்னர், அந்த வெட்டுக்காயம் மற்றும் காயங்கள் ஆறுவதற்கு நிறைய நாட்கள் ஆகும். மேலும் இப்படி நாட்கள் அதிகமாவதால், அவ்விடத்தில் தொற்றுகள் அதிகம் ஏற்படும்.

தூக்கத்தின் போது மூச்சுத்திணறல்

தூக்கத்தின் போது மூச்சுத்திணறல்

பொதுவாக உடல் எடை அதிகமாக இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு நிம்மதியான தூக்கமே கிடைக்காது. அவர்கள் தூங்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அதனால் குறட்டை விடுவார்கள். இப்படி குறட்டை விடுவதால், அவர்களுக்கு இன்னும் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அதில் இரத்த நாளங்களில் இரத்த உறைவு, பிரசவ நாட்களில் பிரச்சனை மற்றும் சிலர் கருத்தரிக்கும் தன்மையையே இழக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Being Obese And Pregnant: Complications

If you are very overweight and pregnant, keep in constant touch with your midwife or doctor. Don’t try to lose weight while being pregnant as this may be dangerous for you and your baby’s health. Let us look into some problems that can arise when being overweight during pregnancy.
Story first published: Monday, March 17, 2014, 13:46 [IST]
Desktop Bottom Promotion