For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் பெண்கள் அறவே தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

By Boopathi Lakshmanan
|

கர்ப்ப காலங்களில் நீங்கள் எதை சாப்பிட்டாலும் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் இதைச் சரியாகவும் மற்றும் சில நேரங்களில் தவறாகவும் செய்து வருவீர்கள். உங்களுக்கு பிடித்தமான உணவை சில நேரங்களில் மிகவும் குறைவாக யாருக்கும் தெரியாமல் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கலாம்.

எனினும், கர்ப்ப காலத்தில் சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றித் தெளிவாக தெரிந்து கொள்வது நன்மை தரும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காப்ஃபைன்

காப்ஃபைன்

நீங்கள் தினமும் காப்ஃபைன் கலந்த பானத்தை குடிக்காமல் இருக்க முடியவில்லை எனில், ஒரு நாளைக்கு 2 கோப்பை என்ற அளவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவது நலம். எனினும், உங்களுடைய உணவிலிருந்து காபியை முழுமையாக நீக்கி விடுவது நல்ல முடிவாக இருக்கும். 'கர்ப்ப காலத்தில், அதுவும் முதல் 3 மாதங்களில் அளவுக்கு அதிகமாக காப்ஃபைன் உடலில் சேர்ந்தால், கருச்சிதைவோ அல்லது குழந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளோ ஏற்படக் கூடும். எனவே, இந்த விஷயத்தில் சற்றே மிதமான கொள்கையை கடைப்பிடித்து, காபி குடிப்பதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்' என்கிறார் மும்பையைச் சேர்ந்த உணவு ஆலோசகரும் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஊட்டச்சத்து ஆலோசகருமான தீப்ஷிக்கா அகர்வால் என்பவர்.

கோழி மற்றும் மீன்

கோழி மற்றும் மீன்

பாதியாக வெந்த முட்டை, கறி அல்லது மீன் ஆகியவற்றை கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உணவில் சேர்க்கக் கூடாது என்பதை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். 'பச்சையான அல்லது சமைக்காத கடல் உணவுகளை

சாப்பிடுவதால் தாயின் உடலில் தொற்றுகள் ஏற்படும். பச்சை முட்டைகளும், கறியும் குழந்தை பெறப் போகும் பெண்ணுக்கு வாதம் தொடர்பான நோய்களை வர வைக்கும். இந்த உணவுகளின் வாயிலாக நோயினாலோ அல்லது தொற்றினாலோ

பாதிக்கப்பட்டு, தொப்புள் கொடி வழியாக குழந்தையையும் பாதிக்கும்' என்கிறார் தீப்ஷிக்கா. இதன் காரணமாக குறைப் பிரசவம் ஆகவோ அல்லது குழந்தைக்கு மன ரீதியான பாதிப்புகளோ ஏற்படவும் செய்யும். மேலும், கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத 10 உணவுகளைப் பற்றித தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.

கிருமி நீக்கப்படாத பாலாடைக்கட்டி அல்லது பால்

கிருமி நீக்கப்படாத பாலாடைக்கட்டி அல்லது பால்

கர்ப்ப காலங்களில் பால் பொருட்களை சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும். உடலுக்குத் தேவைப்படும் கால்சியத்தை பெற இது உதவினாலும், கிருமி நீக்கம் செய்யப்படாத பாலாடைக்கட்டி மற்றும் பாலை சாப்பிடுவதில் இருந்து சற்றே விலிக இருங்கள். 'கிருமி நீக்கம் செய்யப்படாத பாலடைக்கட்டி மற்றும் பாலில் உள்ள கிருமிகள், தொப்புள்கொடி வழியாக குழந்தையை அடைந்து, கருச்சிதைவு ஏற்படக் காரணமாகி விடுகின்றது. எனவே, பாதுகாப்பின் பொருட்டாக நீங்கள் வாங்கும் பாலாடைக்கட்டி மற்றும் பாலின் லேபிள்களை பரிசோதித்து வாங்குங்கள். பால் மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவற்றை கர்ப்ப காலங்களில் சாப்பிடாலாமா என்பதைப் பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதை குனுயு கட்டாயமாக்கி உள்ளது. 'பாக்கெட்டின் மேலே 'கிருமி நீக்கம்

செய்யப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் காண முடியாத போது, அந்த பொருளுக்கு குட்பை சொல்லி விடுங்கள்' என்கிறார் தீப்ஷிக்கா.

தெருக்களில் விற்கும் உணவுப்பொருட்கள்

தெருக்களில் விற்கும் உணவுப்பொருட்கள்

தெருக்களில் கிடைக்கும் அனைத்து உணவுப் பொருட்களுமே கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், அந்த பொருட்களை தயாரிக்க பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் சுத்தத்தை கவனிக்க வேண்டும். 'தெருக்களில் உணவுப் பொருட்களை வாங்கினால் தொற்றுகள் வரும். நோய்வாய்ப்பட்டிருப்பதும், மருந்துகளை சாப்பிடுவதை தவிர்க்க முடியாமல் செய்து வருவதும், மற்றும் மருந்துகள் சாப்பிடுவது குழந்தைக்கு நல்லதல்ல என்பதாலும், தெருக்களில் வாங்கிய உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நலம். மேலும், சாதாரண நாட்களை விட, கர்ப்ப காலங்களில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், மற்ற எல்லோரையும் விட, அவளுக்கு அதிகமான நோய்த்தொற்றுகள்

எற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹாலை அவ்வப்போது ஒரு பானமாக அருந்தி வந்தால் சரி தான், ஆனால் அளவுக்கு அதிகமாக அதனை உள்ளே தள்ளினால் வரும் பிரச்சனை பேரபாயமாக இருக்கும். 'கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் குடித்தால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், மூளை வளர்ச்சியும்

சரியில்லாமல் இருக்கும். குழந்தையிடம் முகம் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்கும் இது வழிவகுக்கும்.

புகைப்பழக்கம்

புகைப்பழக்கம்

வெளிப்படையான காரணங்களுக்காக சிகரெட்டுகள் கர்ப்பமான பெண்களுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை எனலாம். 'இதில் நிக்கோடின் உள்ளது என்றாலும், சிகரெட் புகைப்பதன் மூலம் உங்களுடைய குழந்தையும் நிக்கோடின், கார்பன் மோனாக்சைடு

மற்றும் தார் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. குழந்தைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவை சிகரெட் குறைத்து விடுவதால், பிறப்பு ரீதியான குறைபாடுகள், குறைந்த எடை அல்லது உடலில் பிளவுகள் போன்றவையும் கூட ஏற்படலாம்' என்று எச்சரிக்கிறார் தீப்ஷிக்கா.

கிரீன் டீ

கிரீன் டீ

ஆரோக்கியமான மற்றும் மூலிகை குணமுள்ள கிரீன் டீயை கர்ப்ப காலங்களில் குடிப்பi தவிர்க்கவும். 'கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கிரீன் டீ நல்லது என்று விளக்கம் தர ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், ஏன் தவிர்க்க

வேண்டும் என்பதற்கு பின்வரும் விஷயத்தை காரணமாக சொல்லலாம். கிரீன் டீ சாப்பிடுவதால் நமது உடலின் இயக்கம் அதிகரிக்கிறது, எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்குள்ளும் இந்த மாற்றங்கள் அதிகளவில் நடக்கும். ஆனால், கர்ப்பமாக இருக்கும் போது தேவையான விஷயம், நிதானம் - வேகம் அல்ல' என்கிறார் தீப்ஷிக்கா. மேலும், கிரீன் டீயிலும் சிறிதளவு காப்ஃபைன் உள்ளதால், அளவுக்கு அதிகமாக கிரீன் டீயை குடிப்பது, சாதாரண காபி அல்லது டீயின் அளவிற்கு கேடு விளைவிக்கும். அளவுக்கு அதிகமாக கிரீன் டீ குடித்தால், அது உடலில் ஃபோலிக் அமிலம் சேருவதை தவிர்க்கும். இதனால் நீங்களும், உங்களுடைய குழந்தையும் ஃபோலிக் அமிலம் பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Things You Should Avoid During Pregnancy

Though a little cheating even while following a healthy pregnancy diet plan is permissible but it makes sense if you can steer clear of the following pregnancy taboo foods.
 
Desktop Bottom Promotion