For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய சில சைவ உணவுகள்!!!

By Maha
|

பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிக அளவில் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே அப்போது அவர்கள் சைவ உணவுகளின் மூலம் தான் உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெற முடியும். முக்கியமாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் புரோட்டீன் அதிக அளவில் தேவைப்படும். ஆகவே கர்ப்பிணிகள் புரோட்டீன் அதிகம் நிறைந்த சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இதர சத்துக்களான கால்சியம், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்தவைகளையும் உட்கொண்டு வர வேண்டும்.

இங்கு கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்த சைவ உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை உணவில் சேர்த்து வந்தால், சிசு நன்கு ஆரோக்கியமாக, எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் வளரும். சரி, இப்போது கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சில சைவ உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பன்னீர்

பன்னீர்

புரோட்டீன் அதிகம் நிறைந்த சைவ உணவுகளில் ஒன்று தான் பன்னீர். இதில் புரோட்டீன் மட்டுமின்றி, கால்சியமும் அதிக அளவில் நிறைந்துள்ளன. எனவே கர்ப்பிணிகள் பன்னீரை அவ்வப்போது எடுத்து வருவது நல்லது.

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் கலோரிகள் சுத்தமாக இல்லாததால், அச்சமின்றி கர்ப்பிணிகள் இதனை எடுத்துக் கொள்ளலாம். அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி, கேல், முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சிவப்பு காராமணி

சிவப்பு காராமணி

காராமணியில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதுவும் குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய புரோட்டீன் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளதால், இதனை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம்.

தயிர்

தயிர்

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் மற்றும் செரிமானத்தை அதிகரிக்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டால், உணவில் தயிரை அதிகம் சேர்த்து வாருங்கள்.

மீல் மேக்கர்

மீல் மேக்கர்

மீல் மேக்கரில் புரோட்டீன் அதிகம் இருப்பதுடன், வைட்டமின் டி-யும் நிறைந்திருப்பதால், இதனை வாரம் ஒருமுறை எடுத்து வருவது நல்லது.

கேரட்

கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ வளமாக இருப்பதால், இதனை தினமும் உணவில் கர்ப்பிணிகள் சேர்த்து வந்தால், குழந்தையின் கண்களுக்கு மிகவும் சிறந்தது.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸில் பல வகைகள் உள்ளன. அனைத்து வகையான பீன்ஸிலும் உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் எனர்ஜியைக் கொடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து இருப்பதால், இவை குடலியக்கத்தை சீராக வைக்கும்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்புக்களை அன்றாடம் கர்ப்பிணிகள் உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய அளவு புரோட்டீனானது கிடைக்கும். எனவே உணவில் பருப்பு வகைகளை மறக்காமல் சேர்த்து வாருங்கள்.

செரில்

செரில்

செரிலில் பழங்கள், பால் மற்றும் நட்ஸ் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கால்சியம், வைட்டமின் டி மற்றும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு வேண்டிய DHA போன்றவை அதிக அளவில் கிடைக்கும்.

தேங்காய்

தேங்காய்

தேங்காயில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் உட்கொண்டு வந்தால், உடலுக்கு எனர்ஜி கிடைக்கும். மேலும் இந்திய மூட நம்பிக்கைகளின் படி கர்ப்பிணிகள் தேங்காய் சாப்பிட்டால், குழந்தை வெள்ளையாக பிறக்குமாம்.

நட்ஸ்

நட்ஸ்

நட்ஸ்களில் பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வைட்டமின் ஈ கிடைக்கும். எனவே இதனை ஸ்நாக்ஸாக எடுத்து வருவது மிகவும் நல்லது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

கர்ப்பிணிகள் தினமும் ஒரு வாழைப்பழத்தையாவது எடுத்து வர வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைப்பதுடன், உடலில் நார்ச்சத்துக்களின் அளவு அதிகரித்து, குடலியக்கம் சீராக செயல்படும்.

பால்

பால்

கர்ப்பிணிகள் முடிந்த அளவில் பால் அதிகம் குடித்து வருவது, நெஞ்செரிச்சலை குணப்படுத்துவதுடன், உடலில் புரோட்டீன், கால்சியம் போன்றவற்றின் அளவையும் அதிகரிக்கும்.

கொள்ளு

கொள்ளு

கொள்ளுவில் குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. மேலும் கர்ப்பிணிகள் கொள்ளு சாப்பிட்டால், அவர்களின் தசைகளின் வளர்ச்சி திடமாக இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் கர்ப்பிணிகளுக்கு நல்லது. ஏனெனில் இலை கர்ப்பிணிகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய வைட்டமின் சி மற்றும் பி சத்துக்களை கொடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Vegetarian Foods To Have During Pregnancy

Vegetarianism is not a diet restriction that will affect your baby's growth if you ensure that you are having the best vegetarian foods to eat during pregnancy.
Desktop Bottom Promotion