For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவு இருக்கும் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்!!!

By Maha
|

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். நீரிழிவு இருந்தால் உண்ணும் உணவில் கவனம் மற்றும் கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஆனால் அந்த நீரிழிவு கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு இருந்தால் என்ன செய்வது? அப்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது குழந்தையையும் பாதித்துவிடும்.

கர்ப்பிணிகள் நீரிழிவு இருக்கும் போது, கர்ப்ப காலத்தில் உணவு முறையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். மேலும் சாதாரண கர்ப்பிணிகளுக்கும், நீரிழிவு இருக்கும் கர்ப்பிணிகளும் எடுத்துக் கொள்ளும் உணவு முறையானது வேறுபடும். ஆகவே நீரிழிவு இருக்கும் கர்ப்பிணிகள், தங்களுக்கு வேண்டிய சத்துக்களை ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் எடுத்துக் கொள்ளலாம்.

இங்கு கர்ப்ப கால நீரிழிவு இருக்கும் பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணி கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிம் இருப்பதுடன், கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவாக உள்ளது. இதனால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு/உருளைக்கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கு/உருளைக்கிழங்கு

கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு எனர்ஜியானது தேவைப்படும். அத்தகைய எனர்ஜியை 1 கப் உருளைக்கிழங்கு அல்லது 1/2 கப் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிட்டு அதிகரிக்கலாம்.

தானியங்கள்

தானியங்கள்

கர்ப்ப கால நீரிழிவு உள்ள பெண்களுக்கு தானியங்களான ஓட்ஸ், தினை போன்றவை மிகவும் நல்லது. ஏனெனில் இதில் உடலுக்கு வேண்டிய கார்போஹைட்ரேட் இருப்பதுடன், மலச்சிக்கல் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.

சிக்கன் அல்லது மாட்டிறைச்சி

சிக்கன் அல்லது மாட்டிறைச்சி

சிக்கன் அல்லது மாட்டிறைச்சியில் உடலுக்கு வேண்டிய புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது. ஆகவே இதனை அளவாக, அதே சமயம் நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

நீரிழிவு இருக்கும் கர்ப்பிணிகளுக்கு சிட்ரஸ் பழங்கள் மிகவும் நல்லது. அதில் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பெர்ரி போன்றவை அடங்கும். ஆனால் இவற்றை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிடுது தான் நல்லது.

ஆப்பிள்

ஆப்பிள்

நீரிழிவு இருப்பவர்கள் ஆப்பிள் சாப்பிடக்கூடாது. ஆனால் கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 1 பச்சை ஆப்பிள் அல்லது 1/2 சிவப்பு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.

குறைந்த கொழுப்புள்ள தயிர்

குறைந்த கொழுப்புள்ள தயிர்

நீரிழிவு நோயாளிகள் க்ரீம் மில்க் மற்றும் பால் பொருட்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் அவர்கள் குறைந்த கொழுப்புள்ள தயிரை எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் அவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

நீரிழிவு உள்ளவர்கள் பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, ப்ராக்கோலி மற்றும் லெட்யூஸ் போன்றவற்றை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

சால்மன் அல்லது டூனா

சால்மன் அல்லது டூனா

கர்ப்பிணிகளுக்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின் ஈ மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவசியம் தேவை. இத்தகைய சத்துக்கள் மீனில் உள்ளது. எனவே மாதம் ஒரு முறை சால்மன் அல்லது டூனா மீனை நன்கு க்ரில் செய்து சாப்பிடுங்கள்.

முட்டை

முட்டை

நீரிழிவு இருக்கும் கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். ஏனெனில் முட்டையில் சர்க்கரை எதுவும் இல்லாததால், இதனை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெறலாம்.

சோயா பொருட்கள்

சோயா பொருட்கள்

நீரிழிவு இருப்போருக்கு, புரோட்டீனை சோயா பொருட்களின் மூலம் எடுத்துக் கொள்ளலாம். அதிலும் சைவ உணவாளராக இருந்தால், இறைச்சிக்கு சிறந்த மாற்று உணவாக சோயா பொருட்கள் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

11 Pregnancy Foods For Diabetics

If you are healthy and still going crazy managing your pregnancy diet, imagine the plight of expectant mother who is diabetic! The right pregnancy food for diabetics is very important to keep their gestational period risk-free. Here are some pregnancy foods for diabetics and also for women who suffer from gestational diabetes.
Story first published: Friday, May 2, 2014, 17:20 [IST]
Desktop Bottom Promotion