For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகளே! வாந்தி அடிக்கடி வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

கர்ப்ப காலத்தில் வாந்தியின் மூலம் உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வெளியேறுவதை நிறுத்த, வாந்தி வருவதைத் தடுக்கும் ஒருசில இயற்கை வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் சரிசெய்யலாம்.

|

Vomiting During Pregnancy
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, பெண்களுக்கு ஆரம்ப காலத்தில் அல்லது கர்ப்ப காலம் முழுவதும் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். ஏன் எந்த ஒரு உணவை சாப்பிட்டாலும், மயக்கம், சோர்வு, வாந்தி, குமட்டல் போன்ற உணவுகள் வரும். இதற்காக மருத்துவரிடம் சென்றாலும், பலனில்லை. அவர்களால் கூட இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறு கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடும் அனைத்தும் வாந்தி எடுக்கும் போது வெளியே வந்தால், நிச்சயம் கர்ப்பிணிகள் மிகவும் வலுவிழந்து இருப்பார்கள். பின் குழந்தை பிறக்கும் போது பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

எனவே வாந்தியின் மூலம் உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வெளியேறுவதை நிறுத்த, வாந்தி வருவதைத் தடுக்கும் ஒருசில இயற்கை வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் சரிசெய்யலாம். இப்போது வாந்தியை தடுக்கும் இயற்கை வைத்தியங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

* உலர் எலுமிச்சை: எலுமிச்சையை துண்டுகளாக நறுக்கி, அதனை குறைவான தீயில் சிறிது நேரம் வறுத்து, பின் அதனை சூரிய வெப்பத்தில் காய வைத்து, பின் அதனை அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எலுமிச்சையை துண்டுகளாக்கி, வெயிலில் 3-4 நாட்கள் காய வைத்து, பொடி செய்து கொள்ளலாம். பின், அந்த பொடியை வாந்தி வரும் மாதிரி இருக்கும் போது, சூடான நீரில் போட்டு, குடிக்க வேண்டும். இந்த செயலை மயக்கம் வருவது போது இருந்தாலும், குடிக்கலாம்.

* இஞ்சி: இஞ்சியின் சிறிய துண்டை சாப்பிட்டாலும், வாந்தி வருவது போன்ற உணர்வு இருந்தாலும் தடுக்கலாம். வேண்டுமெனில் இஞ்சி டீ போட்டு குடித்தாலும், அதனை சரிசெய்யலாம். எனவே கர்ப்பிணிகள் வெளியே செல்லும் போது சிறு துண்டு இஞ்சியை கொண்டு செல்வது நல்லது.

* எலுமிச்சை ஜூஸ்: இது ஒரு சிறந்த மற்றும் பிரபலமான ஒரு மருந்து. அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் வாந்தியை கட்டுப்படுத்த, ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடிப்பது நல்ல பலனைத் தரும்.

* ஓமம்: வாந்தி வந்தாலோ அல்லது வருவது போன்ற உணர்வு இருந்தாலோ, அப்போது சிறிது ஓமத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், வாந்தி வருவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, இவ்வாறு செய்தால், மயக்க உணர்வும் போய்விடும்.

* மூலிகை டீ: ஒரு கப் மூலிகை டீ சாப்பிட்டாலும், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தியை தடுக்கலாம். தற்போது நிறைய மூலிகை டீ உள்ளது. ஏன் இஞ்சியிலிருந்து, சீமைச்சாமந்தி டீ வரை எது வேண்டுமானாலும் குடிக்கலாம். இதனால் மயக்கம், குமட்டல், வாந்தி போன்றவற்றை குணப்படுத்தலாம்.

மேற்கூறியவையே வாந்தி வருவதைத் தடுக்கும் வீட்டு மருந்துகள். வேறு ஏதாவது வாந்தியை தடுக்கும் வீட்டு மருந்துகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Vomiting During Pregnancy: Home Remedies

Lack of nutrition due to vomiting can be a problem. Whenever symptoms of vomiting are felt, many pregnant women have something that makes them feel better. You can try some home remedies to cure vomiting during pregnancy. Take a look at some Indian home remedies to cure vomiting during pregnancy.
Desktop Bottom Promotion